பிற ஆலயங்களோடு உள்ள தொடர்புகள்
செட்டி பாளையாம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்துடன் நிருவாக சம்பந்தமான தொடர்பு பிள்ளையார் ஆலயத்திற்கு உண்டு. முற்காலத்தில் அம்மன் குளிர்த்தி ஆடுவதற்குரிய குரைச்சி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக கூறுவர். பொங்கல் பானைகளுக்கு, இரண்டு பக்கங்களிலும் காப்பு எனப்படும் வளையம் இருப்பதுபோல இங்கிருந்த பெரிய குரைச்சிக்கும் சேதம் உற்றதால் அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. செட்டி பாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்குரிய களுதாவளை வண்ணக்கர் இருவரையும் அவர்களோடு சேர்த்து முப்பது உறுப்பினர்களையும் தெரிவு செய்து அனுப்பும் கடமைப்பாடு பிள்ளையார் ஆலயத்திற்கே உண்டு. திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலின் முற்காலத்தில் களுதாவளை மக்களால் நடாத்தப்பட்டு வந்த திருவிழாவுக்கும் பிள்ளையார் கோவில் நிருவாகமே பொறுப்பாக இருந்தது. இப்போது அத்திருவிழாவை நடாத்த நிருவாகத்தினர் செல்வதில்லை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாகத்தில் களுதாவளைக் கிராம வண்ணக்கரையும் இந்த நிருவாகமே தெரிவு செய்கின்றது. இவை மட்டும் அன்றி பிற ஊர்களில் உள்ள ஆலய நிருவாகிகளோ அல்லது ஏனையவர்களோ ஆலயத் கிராமம் என்பனவாய பொது விடயங்கள் சம்பந்தமாக பிள்ளையார் ஆலயத்துடனே தொடர்பு கொள்கின்றனர். அதுவே பாரம்பாரிய நியதியுமாகும்.
சமய சமூகப் பணிகள் -:
மக்களை நல்வழிப்படுத்தும் நோக்குடன் வகுக்கப்பட்டவைகளே சமயங்கள் சட்டதிட்டங்களால் மட்டும் அன்றி சமய நெறி முறைகளாலும் மனித குலத்தை நெறிப்படுத்த முனைந்தவர்கள் லயத்தை அதற்கான அடித்தளமாக கண்டனர். ஆண்டவன் சன்னிதியிலே அனைவரும் சமமானவர்கள் அங்கே நடைபெற வேண்டிய காரியங்களை தனித்து நின்று செயல்படுத்துவதை விடுத்து குழுக்களாகவும் கூட்டமாகவும் சேர்ந்து நடைமுறைப்படுத்துவதில் அனுகூலங்கள் பல உண்டு. என்பதை அறிந்து கொண்டமையினாலேயே ஆலயங்களை அமைத்து வழிபாடுகளையும் வகுத்தனர். ஊர்கட்டுப்பாடு ஒற்றுமை என்பவற்றோடு சமுதாய மேம்பாட்டுக்காக செயல்த்திட்டங்கள் பலவற்றையும் நடைமுறைப்படுத்தும் இடமாகவும் ஆலயங்கள் செயற்பட்டன. அந்த வகையில் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயமும் குறிப்பிடத்தக்கதோர் இடத்தை வகிக்கின்றது. ஆரம்ப காலத்தில் வாரத்துக்கு ஒர் தடவை வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூசை, தினப் பூசையாக வளர்ச்சிப் பெற்றது. ஆலய நிருவாகிகளும் அதனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் சமய சம்பந்தமான நூல்களை வாசிப்பதிலும் சமய பெரியார்களை அணுகி சமயசம்பந்தமான விடயங்களையும் கோவில் பூசைகள் விழாக்கள் விரதங்கள் போhன்றவை பற்றியும் தாம் அறிந்து கொண்டதோடு பிறருக்கும் அறிவுறுத்த முற்பட்டனர். தேவாலய வீதியில் மெதடிஸ்த தேவாலயத்திற்கு அருகில் கணேசானந்த வாசிகசாலை என்ற பெயரில் நூலகம் ஒன்றையும் அமைத்தனர். அங்கத்தவர்களை சேர்த்து சந்தாப் பணம் அறவிட்டு நூல்களை கொள்வனவு செய்துள்ளனர். களுதாவளையில் இருந்த மெதடிஸ்த மிசன் திருச்சபையினரின் தேவாலயம், பாடசாலை என்பவற்றில் ஆகர்ண சக்தியினால் பொதுமக்கள் சமயம் மாறாதிருக்க பிள்ளையார் ஆலய நிருவாகிகள் அரும்பாடுபட்டுள்ளனர்.
சைவ சமயத்தை சேர்ந்த பிள்ளைகள் சைவ சமய சூழலிலும் அரவணைப்பிலும் கல்வி பயிலவேண்டும் என்ற ஆதங்கத்துடன் இராம கிருஷ்ண மிசன் பாடசாலையை ஆரம்பிப்பதற்கும் பிள்ளையார் ஆலயமும் அதன் நிருவாகிகளும் ஊக்கிகளாக இருந்துள்ளனர். பாடசாலை கட்டிடத்தை அமைப்பதற்குரிய நிலம் வாங்குவதற்கு ஆலயப் பணத்தையும் கொடுத்து உதவியதாக தெரிய வருகின்றது. நித்திய பூசைகளையும் ஒழுங்காக செய்து மக்கள் வழிபாட்டுக்கு உதவியுள்ளனர். முக்கியமான விரதங்களை முறைப்படி அனுட்டிப்பதற்கு வழி செய்துள்ளனர். சமயப் பெரியவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய பலருக்கு சமய தீட்சை வழங்குவதற்கும் முன்னோடிகளாக செயல்பட்டு உள்ளனர்.
ஆலய வீதியெங்கும் நிழல் மரங்கள் நடப்பட்டு உள்ளன. பிரதான வீதியில் இருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையின் மருங்கில் நிழல் தரு மருத மரங்கள் நட்டு பாதுகாக்கப்படுகின்றது. திருவிழாக் காலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, கரகக்காவடி ஆட்டம், கும்மி என்பவற்றின் மூலமும் கலைகளும் கலைஞர்களும் ஊக்கமூட்டப்படுகின்றனர். கலை நிகழ்ச்சிகளை பேணிப் பாதுகாத்து வளர்க்கும் கலைஞர்களுக்கும் கலை நிகழ்வுகளுக்கும் நன்கொடைகளும் ஊக்குவிப்புகளும் பாராட்டுகளும் வழங்கப்படுகின்றன. கல்வி விளையாட்டு முதலியவற்றில் திறமை காட்டியவர்களுக்கு சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படுகின்றன. கிராமத்தின் பொதுத் தேவைகளான வைத்தியசாலை, பாடசாலை நூலகம் என்பவற்றுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் உதவிகள் செய்யப்படுகின்றன. பாலர் பாடசாலை தனியார் கல்வி நிலையங்கள், பொதுப் பணி மன்றங்கள் என்பவற்றுக்கும் அவ்வப்போது தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. விரத காலங்களிலும் விழாக் காலங்களிலும் அன்னதானம் நடாத்தப்படுகின்றது. சமய சம்பந்தமான வகுப்புகளையும் போட்டிகளையும் நடாத்தி சமய அறிவை ஊட்டுகின்றது.
கிராமத்தின் சுகாதாரம், பொருளாதாரம் என்பவற்றுக்கும் உரிய வேளைகளில் கை கொடுத்து உதவுகிறது. தன்னிடம் உள்ள சங்குகள், கொடி, குடை, திருவிழா வாகனங்கள் என்பனவற்றை எல்லாம் எனைய ஆனயங்களுக்கும் இலவசமாக கொடுத்து உதவி வருகின்றது. திருஞான சம்பந்தர் குருகுலத்துக்கு அரிசி,விறகு முதலியவற்றை அன்பளிப்பாக வழங்குகின்றது. பொதுத் தேவைகளுக்காக கோவிலுக்குரிய காணி பூமிகளும் நன்கொடை செய்யப் படுகின்றன. கிராமத்தில் உள்ள எனைய ஆலயங்களுக்கு தேவை ஏற்படும் போது நன் கொடையாகவும் கடனாகவும் பணம் பொருள் என்பன கொடுத்து உதவப்படுகின்றது.அனைதைகள், வறியவர்களின் மரணம் என்பவற்றின் போதும் தேவை அறிந்து உதவுகின்றனர். மருத்துவ மாது வதிவிடம் அமைப்பதற்கு காணியும் வழங்கி உள்ளது.
திடிரென ஏற்படும் தீவிபத்து, வெள்ளப்பெருக்கு ,சூறாவளிக்காற்று என்பனவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கும் இனக்கலவரம், வன்செயல்கள் என்பற்றின் போதும் அகதிகளுக்கு உணவு,உடை,உறைவிடம் என்பன வழங்வதிலும் அக்கறை காட்டியுள்ளது. உள்ளுரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வழிபாட்டுக்கு வருகின்ற அடியார்களின் வசதிக்காக பல்வேறு ஒழுங்குகள் செயல்படுத்தப் படுகின்றன. பொங்கள் தளபாடங்களான பானை, குறைச்சி, குடம், அரிக்கும் தட்டு, திருவலகை,அகப்பை போன்ற தளபாடங்கள் இலவசமாக இங்கே பாவனைக்கு உண்டு. குறைந்த விலையில் விறகு விற்பனை செய்யப்படுகிறது. நேர்க்கடனாக முடி இறக்குவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் செயற்பாடுகளை நோக்கும் போது இது சுமைதாங்கியாக, ஊருண்ணியாக,
கற்பகத்தருவாக, காமதேனாக, கலங்கரைவிளக்கமாக, மின்மாற்றிய செயற்படுவதை அவதானிக்கலாம். கிராமத்தின் ஜீவநாடி இதுவெனக் கூறல் சாலமும் பொருந்தும்.
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்
விளக்கமாக விரைவில்