களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார்

image

ஆலய வருமானம் -:

இவ்வாலயத்திற்குரிய வருமானம் பல்வேறு வழிகளில் பெறப்படுகிறது. அவற்றை நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்.

 

 

கோவிலடி வருமானம்

காணி ஏல விற்பனை

கல்லடிப் பிள்ளையார் உண்டியல் வருமானம்

அரசாங்க தனியார் நன்கொடைகள்.

 

கோவிலடி வருமானம் -:

கோவிலடியில் பெறப்படும் வருமானங்கள் பல்வேறு பிரிவாக பிரித்து நோக்கப்படலாம்.

அ) அருச்சனைகள் -:
பிள்ளையார், நாகதம்பிரான், நவக்கிரகம் என்பவற்றுக்கு அருச்சனைகள் இடம் பெறுகின்றன. தனிப்பட்ட அருச்சனை குடும்ப அருச்சனை இரட்டித்த அருச்சனை நூற்றெட்டு அருச்சனை ஆயிரத்தெட்டு அருச்சனை தேங்காய்வெட்டி அருச்சனை என்று பல வகைப்படும் இவை ஒவ்வொன்றுக்கும் வௌ;வேறு விதமான கட்டணம் விதிக்கப்படுகின்றது.

ஆ) நூல் கட்டுதல் -:
நாளாந்த பூசையின் போது வைரவர் கோவிலில் திருநீறு போடுதலும் நூல் கட்டுதலும் நடைபெறுகின்றன. பேய், பிசாசு, பில்லி, வஞ்சனை, சூனியம், பிணி நீக்கம் என்பவற்றை நோக்காக கொண்டு காவற் தெய்வமான வைரவர் கோவிலில் நூல் கட்டப்படுகின்றது. இதற்குரிய கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிள்ளை விற்று வாங்குதல் -:

குழந்தைகள் பிறந்த பின் அவற்றுக்கு, விக்கினங்கள் நேராமல் இருப்பதற்கும் எதிர் கால வாழ்க்கை சந்தேஷமாகவும் சுபீட்சமாகவும் அமைவதற்கும் அப்பிள்ளைகளை விநாயகரிடம் ஒப்படைத்து விநாயகர் அக்குழந்தையை ஏலத்தில் கூறி விற்க பெற்றோர் விலை வைத்து அப்பிள்ளைகளை பெற்றுக் கொள்வது மரபு. அவ்வேளையில் அக்குழந்தைகளுக்கு முதல் முறையாக பிள்ளையாரின் உள்ள முதைஊட்டி விடுவதும் உண்டு. இவ்வாறு பிள்ளை விற்று வாங்குவதற்குரிய கட்டணமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் காது குத்துவது வழக்கம் கோவிலிலேயே காது குத்துவதும் நடைபெற்றது. இப்பொழுது பெண்குழந்தைகளுக்கு மட்டுமே காது குத்துகின்றனர். குருக்களுக்கு உதவியாளராக உள்ள ஐயரோ அல்லது பணியாளர்களோ இதனை செய்கின்றனர்.

தலை முடி வழித்தல் -:

தலையைக் கொடுப்பதற்கு பதிலாக தலை முடியை தானமாக கொடுக்கும் மரபு தமிழரிடம் உண்டு. பிறந்த பிள்ளைகளின் தலை முடியை முதன் முதலாக ஆண்டவன் சந்நிதியில் வழித்தலையே பெற்றோர் பெரிதும் விரும்புகின்றனர். இந்த ஆலயத்தில் குழந்தைகளின் தலைமுடி வழிப்பதற்கு குறிப்பிட்ட கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவடி, வேலாயுதம் எடுத்தல் -:

திருவிழாக் காலங்களிலும் விசேட தினங்களிலும் பெண்கள் வேலாயுதம் எடுப்பதும், ஆண்கள் காவடி எடுப்பதும் சம்பிரதாயம். இவற்றுக்கு தேவையான வேலாயுதம் வாயலகு என்பவை வெள்ளியால் செய்யப்பட்டு ஆலய நிருவாகத்திடம் உண்டு இவற்றுக்குரிய பெறுமதியை கொடுத்து வாங்கிச் செல்வோர் தமது நேர்கடனை நிறைவேற்றும் போது அவை மீண்டும் ஆலய நிருவாகத்திடம் சேர்கின்றன. இதற்குரிய கட்டணமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னம்பிள்ளை விற்றல் -:

பிள்ளைக்குப் பிள்ளையாக தென்னம் பிள்ளைகளை காணிக்கையாக கொடுப்பது இங்கே காணப்படும் ஒரு வழக்கம் நடுவதற்குரிய இடவசதியற்மையால் இவை தேவைப்படுவோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஆடு, மாடு, கோழிகள் விற்றல் -:

ஆடு, மாடு, கோழி என்பன நேர்த்திக் கடனாக வந்து சேர்கின்றன. இவற்றை நியாய விலையில் பகிரங்க ஏலங் கூறி விற்கின்றனர். அதி கூடிய விலைக்கு கேட்பவருக்கு அவை கொடுக்கப்பட்டு அதற்குரிய பணம் பெறப்படுகிறது.

பூசை நன்கொடைப் பணம் -:

பொங்கற் பூசை மோதக பூசை என்பவற்றை செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் அதற்கான பணத்தை ஆலயத்திற்கு கொடுக்கின்றனர். அவ்வேளைகளில் அவர்களது பணத்திற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்படுவதோடு அதற்கான பூசைப் பங்கும் கொடுக்கப்படுகிறது.

பொருள் விற்பனை -:

ஆலயத்திற்கு வருகின்ற அரிசி, தேங்காய், கற்பூரம், ஊதுவர்த்தி, அபிசேக திரவியங்களான தேன், பசு நெய், பழவகைகள் என்பனவும் வெற்றிலை சுவாமிபட்டு ஆகியவையும் நேர்த்திக் கடனுக்கான பிள்ளையும் தொட்டிலும் மனிதவுறுப்புகள் என்பவைகளும் தேவைப்படும் அடியவர்களுக்கு தேவைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு பற்றுச் சீட்டின் மூலம் பணம் பெறப்படுகின்றது. ஆலயத்தின் நேர்கடனாக வந்த தங்க ஆபரணங்களும் தேவை ஏற்படாதவிடத்து விற்பனை செய்யப்பட்டு பணம் வரவில் வைக்கப்படுகிறது.

விறகு விற்றல் -:

அடியவர்களின் வசதி கருதி மொத்தமாக விறகு கொள்வனவு செய்யப்பட்டு சில்லறையில் விற்பனை செய்யப்டுகின்றது. இதில் மிக சொற்ப அளவிலான வருமானத்தையே எதிர் பார்க்கின்றனர். கிலோ ஒன்றுக்கு உரியவ விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அபிடேகம் -:

உருத்திரா அபிடேகம் ஸ்நபினா அபிடேகம் நூற்றெட்டு சங்காபிஷேகம் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் என்பவற்றை செய்வதற்குரிய செலவு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்குரிய கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் பெரும் லாபம் கிடைப்பதாக இல்லை பெறப்படும் பணம் அபிசேக திரவியங்களைப் பெறுவதற்கும் தட்சனை மதலியவற்றை கொடுப்பதற்கும் சமமாகவே உள்ளது.

திருமணம் -:

கோவிலில் திருமணங்கள் பல நடைபெறுகின்றன. பூசை நேரத்தில் தாலிகட்டுதல் முகூர்த்த நேரத்தில் ஒரு கும்பம் வைத்து தாலிகட்டுதல் முகூர்த்த நேரத்தில் சகல கிரிகைகளுடன் தாலிகட்டுதல் என்பவற்றுக்குரிய கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இக்கிரிகைகளுக்குரிய பொருள்களுக்கும் தட்சணை முதலியவற்றுக்குமான அளவிலேயே கட்பணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

விரதம் -:

இந்த ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் மிக நீண்ட காலமாக அனுட்டிக்கப்படுகின்றது. அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேதார கௌரி விரதமும் செல்வாக்குப் பெற்றுள்ளது. விநாயகர் சட்டி விரதத்தில் காப்புக் கட்டி விரதம் பிடிப்போருக்கு ஒரு வித வரியும் காப்புக் கட்டாது விரதம் பிடிப்போருக்கு வேறு வித வரியும், தீர்மானிக்கப்பட்டுள்ளன. கேதார கௌரி விரதம் அனுட்டிப்போருக்கு பெட்டிக்காப்பு பூசைக் காப்பு என்ற வேறுபாடு இன்றி ஒரே கட்டணமே அறவிடப்படுகின்றது. காரணம் என்ன வென்றால் பெட்டிக் காப்புக்குரிய பொருள்களை தனித் தனியாக விரதாதிகளே கொண்டு வருகின்றனர்.

முற்காலத்தில் அனுட்டிக்கப்பட்ட கந்த சஷ்டி விரதம் திருநீற்றுக் கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வளர்ச்சி கருதி இங்கு கைவிடப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் கார்த்திகை விரதம் விநாயர் சதுர்த்தி விரதம் திருவெம்பாவை விரதம் முதலானவற்றுக்கு, கட்டணம் விதிக்கப்படவில்லை சனிஸ்வர ஹோமம் நடைபெறும் போது அதற்குரிய கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காணி ஏல விற்பனை -:

கோவிலுக்கு சொந்தமான காணிகளை ஆண்டு தோறும் ஏல விற்பனை செய்கின்றனர் இக்காணிகளில் ஒரு பகுதி பெரும் போகத்தில் மானாவாரிச் செய்கையாக மழையை நம்பி செய்யப்படுகிறது. மற்றுமோர் பகுதி பன்குளம் பெரிய குளம், பெரிய வில்லுக் குளம், சின்ன வில்லுக் குளம், வட்டிக் குளம் என்னும் கிராமியக் குளங்களின் நீரைக் கொண்டு செய்கை பண்ணப்படுகின்றது. அந்த அந்தப் போகங்களுக்குரிய காணிகள் உரிய வேளையில் பகிரங்க அறிவித்தலுடன் கோவிலடியில் கை மேல் ரொக்கப் பணத்திற்கு ஏல விற்பனை செய்யப்படும். கூடிய விலையில் கேட்போருக்கு காணி கொடுத்து பற்றுச் சீட்டின் மூலம் பணம் பெறப்படும்.

மேலே கூறப்பட்ட அனைத்துக்கும் பற்றுச் சீட்டு வழங்கப்பட்டு பணம் பெறப்படுகின்றது. கொடுப்பவர்கள் தமக்குரிய பற்றுச் சீட்டுகளை சரியாகவும் தவறாதும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் பெறப்பட்ட பணம் சரியான முறையில் ஆலய நிருவாகத்தின் வரவில் சேர்க்கப்படும்.

கல்லடி உண்டியல் -:

பிரதான பாதை அருகில் உள்ள இவ் உண்டியல் சுமார் பன்னிரெண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. அடியார்களின் காணிக்கையாக அதனுள் போடப்படும் பணம் ஆலய நிருவாகிகளால் திறந்து எடுக்கப்பட்டு உடனடியாக 25 சதம், 50 சதம், 1ரூபா, 2ரூபா, 5ரூபா நோட்டுகள் என்ற வகையில் தரம் பிரிக்கப்பட்டு எண்ணிக் கணக்கிடப்பட்டு அதற்குரிய கூட்டல் குறிப்பு புத்தகத்தில் ஒவ்வொரு நாணயத் தொகுதியின் பெறுமதியும் குறிக்கப்பட்டு மொத்தம் கூட்டி எழுதப்படுகின்றது.

பிள்ளையார் கோவில் உண்டியல் -:

பிள்ளையார் கோவிலில் உள்ள உண்டியல்களும் காலத்திற்கு காலம் கல்லடிப் பிள்ளையார் உண்டியலுடன் சேர்த்து எடுக்கப்பட்டு எண்ணிக் கணக்கிடப்பட்டு வருகின்றன. ஆலய வருமானத்தில் இவ் உண்டியல் பணம் கணிசமான ஒரு பகுதியாகும். இதிலே தப்புகளோ தவறுகளோ மோசடிகளோ ஏற்படாத வகையில் பொது சன நம்பிக்கையை தக்க வைக்கும் முறையில் ஆலய நிருவாகிகள் நடந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது.


அரச தனியார் நன் கொடைகள் -:

அரசாங்கமும் தனியாரும் ஆலய வளர்ச்சிக்காக வழங்குகின்ற நன்கொடைகளையும் உரிய முறையில் பதிவுகளுடன் பெற்றுக் கொள்கின்றனர்.

 

 

ஆலய அமைப்பு பற்றி அறிவதற்கு

 

 

புதியவை இங்கே...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

 

 

 
 
  Domain Name + 1GB Linux India Web Hosting in Rs.349