களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார்

image

திருவிழா

1956ம் ஆண்டுஇலங்கையில் இனக் கலவரம் ஒன்று ஏற்பட்டது. தமிழ்,சிங்கள மக்களிடையேஇருந்த நல்லுறவும் நம்பிக்கையும் இக்கலவரத்தால் பாதிப்புற்றது. மத இன மொழி வேறுபாடு இன்றி வாழ்ந்த தேசிய இனங்கள் இரண்டும் கசப்புணர்வையும் வெறுப்பபையும் ஏற்படுத்திக் கொண்டன. காடையர்களின் அடாவடித்தனங்களால் அப்பாவி மக்களின் உயிரும் உடமைகளும் பறிக்கப்பட்டன. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி வழிபடும் இடம் கதிர்காமம் இலங்கையில் பல பாகங்களிலிருந்து கதிர்காமக் கந்தனுடைய திருவிழாக் காணவும் தீர்த்தம் ஆடவும் அடியவர்கள் யாத்திரையாகவருவர் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுடைய குடியிருப்புகளை ஊடறுத்தும் காட்டுப்பகுதிகளை ஊடறுத்தும் கதிர்காம யாத்திரை நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்கள் கதிர்காம யாத்திரை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பிரதியீடாக ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்த திருவிழா நாட்டில் அமைதி ஏற்பட்டு கதிர்காமம் செல்லக் கூடிய வாய்ப்பு மீண்டும் கிடைத்த போது ஆனி உத்தரத்தில் தீர்த்தத்தை நடாத்துவதாகவும் பன்குளத்தின் ஒரு பகுதியை தனிமைப்படுத்தி ஆழமாக்கி அதிலேயே தீர்த்தம் ஆடுவதாகவும் திருவிழாக்களை ஆண்டு தோறும் பின்வரும் ஒழுங்குப் பிரகாரம் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

1ம் திருவிழா - கோவில் நிருவாகம்
2ம் திருவிழா - கோவில் நிருவாகம்
3ம் திருவிழா - வள்ளி நாயகி குடும்பம்
4ம் திருவிழா - செட்டி குடும்பம்
5ம் திருவிழா - போற்றினாச்சி குடும்பம்
6ம் திருவிழா - சுரக்காய் முர்த்தி குடும்பம்
7ம் திருவிழா - போனாய்ச்சி குடும்பம்
8ம் திருவிழா - பெத்தாக் கிழவி குடும்பம்
9ம் திருவிழா - ஆறு குடும்பங்களின் பொதுத்
10ம் திருவிழா - திருவிழா தீர்த்தோற்சவம்

 

திருவிழா பொதுக் கூட்டம் -:

ஆலய நிருவாகத்தின் சார்பில் திருவிழா பொதுக் கூட்டத்திற்கான அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்படும். மூப்பன் எனப்படும் பறையர்களின் தலைவனை அழைத்து கூட்ட அறிவித்தலை அவனிடம் கொடுத்து அறிவிக்கச் சொல்வர் அவன் பிரசித்த மேளம் எனப்படும். சிறிய மேளத்தில் அடித்து செய்தியைக் கூறுவான். விதானை உடையார் முக்கியமான பிரமுகரிடம் எல்லாம் கையெழுத்து பெற்றுக் கொள்வான். இதற்கான சன்மானமும் நிருவாகத்தால் அவனுக்கு வழங்கப்படும் சலவை தொழிலாளர்களின் தலைவனான கட்டாடி என்பவனிடம் இச்செய்தியை கூறி மாலை நேரத்தில் முக்கிய சந்திகளில் நின்று வண்ணான் 'கூ' என்று தகவல் தெரிவிப்பதுவும் உண்டு. பிற்பட்ட காலத்தில் ஒலி பெருக்கி மூலம் கூட்டத்திற்கான அறிவித்தல் பகிரங்கப் படுத்தப்படுகின்றது. ஆலய நிருவாகிகளின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் போது திருவிழா பற்றியே முக்கிய கவனம் செலுத்தப்பட்டாலும் ஆலயம் கிராமத்தின் பொதுவிடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்படுவது வழக்கம். ஆலயத்தின் கணக்கறிக்கை நிருவாக ஒழுங்குகள் என்பன எல்லாம் பேசப்படுவது உண்டு. திருவிழா தொடங்கிய காலத்தில் திருவிழாவிற்குரிய முழுமையான வசதிகள் ஆலயத்தில் இருக்க வில்லை அதனால் வண்ணக்குமாருடன் கடுக் கண்டவர். ஊர் பிரமுகர்கள் என்போரும் இணைந்து திருவிழாவிற்குரிய வேலைகளை பங்கிட்டுக் கொண்டனர். திருவிழாக் காலத்தில் தேங்காய்ப் பாதிகளில் எண்ணெய் ஊற்றி எரித்தும் தீவர்த்திகள் தீப்பந்தங்கள் என்பனவற்றை கொழுத்தியும் வெளிச்சம் ஊட்டினர். கடைக்காரர் குப்பிலாம்பு, அரிக்கன் லாம்பு, கடல் லாம்பு என்பவற்றால் ஒளி ஊட்டினர் பெற்ரோமெக்ஸ் லாம்புகள் பாவனைக்கு வந்தகாலத்தில் 25 - முதல் 30 பெற்ரோ மெக்ஸ் லாம்புகள் வாடகைக்கு பெறப்பட்டு வெளிச்சமூட்டின. பின்னர் மின் பிறப்பாக்கிகள் எனப்படும்.

லைற் மெசின்கள் மூலம் ஒளி ஊட்டப்பட்டது. மட்டக்களப்பு, காத்தான்குடி ஆரையம்பதி பாண்டிருப்பு கல்முனை முதலிய இடங்களில் இருந்து மின் பிறப்பாக்கிகள் வாடகைக்கு பெறப்பட்டன. ஒலி பெருக்கியும் இவ்வாறே பெறப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு வகைப்பட்ட சினிமாப் பாடல்கள் எல்லாம் இசைத்தட்டுகள் மூலம் ஒலிபரப்பப்பட்டன. கோயில் ஆசாரத்திற்கும் கலாசாரத்திற்கும் பொருத்த மற்ற பாடல்களும் பிற சமயத்து பாடல்களும் ஒலிபரப்பப்பட்டதும் உண்டு பின்னர் படிப்படியாக நிலைமை மாறி இந்துசமய பக்திப் பாடல்கள் மட்டுமே ஒலி பரப்புவது என்றநிலை உருவாயிற்று திருவிழா வேலைகளை வண்ணக்குமாருடன் வேறு சிலரும் சேர்ந்து பொறுப்பேற்று நடாத்தியது உண்டு. நேர்த்திக் கடனாக ஆலயத்திற்கு, ஒலி பெருக்கி ஒன்று கிடைத்தது பின்னர் மின் பிறப்பாக்கி ஒன்று ஆலய நிருவாகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டது. இதனால் ஆலயத்தின் ஒலி ஒளித்தேவை ஓரளவில் பூர்த்தி செய்யப்பட்டது. மின்சார சபையின் மின்மாற்றி மூலமான மின் ஒளியும் சேர்ந்து பெரும் அளவான மின் தேவையை பூர்த்தியாக்கியது.

திருவிழாக்களை சிறப்பாகச் செய்வது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். கோவிலுக்கு வெள்ளையடித்தல், வருணம் பூசுதல், உள்வீதி வெளிவீதி சுத்தம் செய்தல் கிராமத்தை துப்பரவு செய்தல் தோரணம் கட்டுதல், துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் மலசல கூட வசதிகள், போக்குவரத்து வசதிகள் திருவிழா பற்றிய விளம்பர ஏற்பாடுகள் மேளம், நாதஸ்வர ஒழுங்குகள், கடை வீதிகளின் ஒழுங்கமைப்பு, தொண்டர் சபை, சாரணர் இயக்கத்தின் சேவை, வைத்திய வசதிகள், இறுதிநாள் திருவிழா தீர்த்தம் என்பவற்றின்போது ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதிப் படுத்தல் என்பனவாய விடயங்கள் ஆலோசிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதுவும் நடைபெறும். திருவிழாக் காலங்களில் கூட்டுப் பிரார்த்தனை கதாப் பிரசங்கம் சொற்பொழிவு நாட்டுக் கூத்து, வசந்தன், கரகம், கும்மி, கோலாட்டம், ஆனந்தக் காவடி ஆட்டம், இசை நிகழ்ச்சி, தீப்பந்தம் சுழட்டுதல் என்பன பற்றி எல்லாம் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். பாடசாலைப் பிள்ளைகளும் மன்றங்களின் உறுப்பினர்களும் வேலைகளை பொறுப்பேற்பது வழக்கம். அது பற்றியும் ஆலோசிக்கப்படும். 9ம் நாள் இரவு நடைபெறும் திருவிழாவை தொடர்ந்து மாம்பழத்திருவிழாவும் தீர்த்தம் முடிவுற்றதும் திருப்பொன்னூஞ்சலும் நடைபெற்று வருகின்றன. அண்மைக் காலமாக தீரத்;தோற்சவ தினத்தன்று மாபெரும் அன்னதானம் ஒன்றும் இடம் பெறுகின்றது. இவற்றை சிறப்பாக நடாத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படும். ஆலயத்திற்கு வெளியில் இருந்து குடும்ப ரீதியான திருவிழாக்களின் போது தோரணம் முத்துச் சப்பரம் பாற்குடப் பவனி முதலானவற்றை எடுத்து வருவது பற்றியும் கலந்தாலோசிக்கப்படும். பெரும்பாலும் கொம்புச் சந்தி அம்மன் ஆலயத்தில் இருந்தே இவை எடுத்து வரப்படுவது வழக்கம். சில வருடங்களில் திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம் கடற்கரை ஈசுவரன் ஆலயம் என்பவற்றிலிருந்து இவை எடுத்து வரப்பட்டதும் உண்டு.

திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் களுதாவளைக் கிராம வாசிகளுக்கு விசேட அறிவித்தலும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படும். வண்ணான 'கூ' என்னுதல் மூலமும் ஒலிபெருக்கி மூலமும் மச்சம், மாமிசம், மதுபானம் தவிர்ப்பது பற்றியும் ஊர்க்கட்டுப்பாடுகளை கடைப் பிடிப்பது பற்றியும் அறிவிக்கப்படும்.

திருவிழா ஆரம்ப தினத்தில் கிரியை முறைப்படி ஆலய குருவால் சம்பிரதாய பூர்வமான கிரியைகள் நடாத்தப்படும் முக்கியமாக வாஸ்த சாந்தி நடை பெறும் பொதுவான அலங்காரங்கள் யாவும் நிறைவு பெற்றிருக்கும். பிரதான வீதியில் இருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் அழகிய மகர தோரணம் கட்டப்பட்டு இருக்கும். ஆலய முகப்புத் தோரணம் புதுப்பிக்கப்பட்டு இருக்கும். வாழை, தென்னங்கருத்து, கமுகம் ஓலை, கரும்பு, இளநீர் குலைகள், கொடிச் சீலைகள், சரங்கள் என்பனவெல்லாம் கட்டப்பட்டு பூர்வாங்க அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கும். 1ம் நாள் திருவிழாவும் 2ம் நாள் திருவிழாவும் போட்டிகள் அற்ற முறையில் நிருவாகத்தின் பொதுவில் நடைபெறும் 1ம் நாள் திருவிழாவின் போது அறுகுடும்பங்களின் தலைவர்களான வண்ணக்குமார்களும் 2ம் நாள் திருவிழாவின் போது ஆறு குடும்பங்களின் கடுக்கண்டவர்களும் கிராமத்தின் சம்பிரதாய வரிசைக் கிரமப்படி சங்கற்பம் இருப்பது இப்போதுள்ள நடைமுறையாகும். இந்த இரண்டு நாளும் வசந்த மண்டபத்தில் இருக்கும் சுவாமிகள் பிள்ளைத்தண்டிலே உள்வீதி மட்டுமே வலம் வருவர். வாகனத்தில் வெளிவீதி வலம் வருவதில்லை.

இந்த இரண்டு நாள் திருவிழாக்களும் ஆலய நிருவாகப் பொறுப்பில் நடை பெறுவதால் இத்திருவிழாக்களுக்கு உரிய ஒழுங்குகளையும் நிருவாக உறுப்பினர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்வர் பூசை திருவிழாக்களுக்கு உரிய சாமான்களை தேடுவது அவற்றை நடைமுறைப்படுத்துவது முதலியன இவற்றுள் அடங்கும். திருவிழாக் காலங்களில் ஆலய பிரதமகுருவுக்கு சமையலுக்கு வேண்டிய பொருள்கள் பச்சைப் படியாக கொடுக்கப்படும் முதல் இரண்டு நாட்களும் ஆலய பொறுப்பிலும் 9ம் நாள் ஆறு குடும்பங்களின் பொறுப்பிலும் குடும்ப ரீதியான திருவிழாக்களில் அந்தந்த குடும்பத்திiராலும் இவை வாங்கிக் கொடுக்கப்படும் திருவிழாக் காலங்களில் கோவிலில் பணிபுரியும் ஐயர் காவலாளி நாதஸ்வர மேளகாரர் ஒலி ஒளி அமைப்பாளர்கள் சாத்துப்படி. சோடணை செய்வோர். மற்றும் தொண்டுகள் செய்வோருக்கு காலை மதியம் இரவு சாப்பாடு வழங்கப்படுகின்றது. குடும்பத் திருவிழாக்களின் போது குடும்பகாரர்களே இதனைச் செய்வது வழக்கம்.

 

குடும்பத் திருவிழாக்கள் -:

3ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரையுள்ள 6 திருவிழாக்கள் குடும்பங்களின் பொறுப்பில் நடைபெறுவதால் அந்தந்த குடும்பங்களின் வண்ணக்குமாரே அத்திருவிழாக்களுக்கு முழுப் பொறுப்பாளர்களாகவும் தலமை தாங்குபவராகவும் இருப்பார். திருவிழா பொதுக் கூட்டத்தை அடுத்து ஒவ்வொரு குடும்பதினரும் தத்தமது வண்ணக்கர் தலைமையில் தனித் தனியாக குடும்பன் கூட்டங்களை நடத்துவர் இக் கூட்டங்கள் பெரும்பாலும் வண்ணக்கரின் வீட்டில் நடைபெற்வது வழக்கம். திருவிழா பொதுக் கூட்டங்களில் எடுக்கப்ட்ட தீர்மானங்களுக்கு அமைவாக குடும்ப கூட்டங்களின் தத்தமது திருவிழாக்களை ஒழுங்காகவும் விமருசையாகவும் செய்வதற்குரிய தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் வகுத்துக் கொள்வர். விசேட சோடனைகள் மேளதாள வாத்திய ஒருங்குகள் கூட்டுப் பிராத்தனை கலை நிகழ்ச்சிகள் சமயசம்பந்தமான சொற் பொழிவுகள் வானவேடிக்கைகள் சாத்துப்படி, சப்பறம் தோரணம் கொண்டு வருதல், பாற்குடம் எடுத்துவருதல் கரககாவடி ஆட்டங்கள் ஒலி ஒளி அமைப்புகள் அன்னதான ஒழுங்கள் என்பனவான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு கொருத்தமானதும் தகுதி வாய்தவர்களுமான குழக்கள் தெரிவு செய்யப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஆறு குடும்பத்தினரும் தத்தமது திருவிழாக்கள் மற்றையவர்களின் திருவிழாக்களை விட சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று முடியவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். தத்தமது திருவிழாக்கள் மற்றையவர்களின் திருவிழாக்களை விட சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று முடிய வேண்டும் எனபதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தத்தமது திருவிழாக்களின் போது பொருந் தொகையான அடியார்கள் கோவிலுக்கு வந்து பூசை. திருவிழா நிகழ்ச்சிகள் என்பவற்றை காணவேண்டும்.

என்பதில் மிகுந்த அக்கறையோடு செயற்படுவர். தேனீக் கூட்டில் தேனீக்கள் ராணித் தேனீயின் தலைமையில் ஒற்றுமையாகவும் சுறுசுறுப்பாகவும் தத்தமது கடமைகளை நிறைவேற்றுவது போன்று வண்ணக்கர் தலைமையில் திருவிழா செயற்பாடுகள் தீவிரமாக நடைபெறும். தனிப்பட்ட கோபதாபங்கள் மன உளைச்சல்கள் சண்டை சச்சரவுகள் என்பவற்றையெல்லாம் மறந்து கடந்து குடும்பம் என்ற ரீதியில் ஒரே நோக்கோடு ஒற்றுமை பட்டுநிற்பர். தமது திருவிழாக்களை சிறப்பிப்பதற்காக சொல்லாமல் செய்வார். பெரியார் என்பதற்கேற்ப தாமாகவே முன்வந்து பல பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணி செய்கின்ற சிரமதான செயற்பாட்டினை திருவிழாக் காலங்களில் நிறைவாகக் காணலாம். அதிகாலை தொடக்கம் அவரவர் திருவிழா முடிவுறும் வரை அக்குடும்பத்தினரே கோவிலைப் பொறுப்போற்று செயற்படுவதுபோல காரியங்கள் நடைபெறும் அன்றைய திருவிழாவுக்குரியவர் அதிகாலையிலேயே கோவிலடிக்கு சென்று கோவில் காரியங்களை கவனிக்கத் தொடங்குவார். அவரவர் திட்டத்திற்கும் திருப்பதிக்கும் ஏற்ப ஆலயத்தின் சோடினைகளும் ஒலி, ஒளி அமைப்புகளும் புனரமைக்கப்படும் கமுகம் ஓலை வாழை ஈச்சை என்று பலவகைப்பட்ட அலங்காரங்கள் ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் நடைபெறும். தத்தமது கை வண்ணத்தில் உருவான கைவேலைப் பாடுகள் எல்லாம் ஆலய சோடனையின் போது வெளிக்காட்டப்படும்.

தேவலோகம் போல அலங்கரிப்பதில் அவர்களுக்கு அலாதியான ஆசை கோவில் மேளத்துடன் விசேட மேளங்கள் சேர்ந்து கொள்ளுவதும் உண்டு தமது திருவிழா நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வதோடு ஆண்டவனின் அருள் பெற்று உய்ய வருமாறும் ஒலி பெருக்கி மூலமும் நோட்டீஸ் மூலமும் அறிவிப்பதும் வழக்கம் குடும்பத் திருவிழாக்களின் போது அக்குடும்பத்தினரின் தெரிவுப்படி ஒருவர் சங்கற்பம் இருப்பார் வண்ணக்கர் கடுக்கண்டவர். நிறுவாக உறுப்பினர் குடும்பத்தின் அங்கத்தவர் என்பவர்களில் இருப்பது வழக்கம் சாத்துப்படி விடயத்திலும் மிகுந்த காட்டப்படும். உருத்திராபிஷேக கும்பங்களுக்கும் மூலமூர்த்தி, பரிவார மூர்த்திகள் எழுந்தருளி மூர்த்திகள் என்பவற்றுக்கெல்லாம் பூமாலைகளும் பட்டுகளும் நிறைவாகவும் பொலிவாகவும் போடப்படும்.

கும்பங்கள் யாவும் உள்வீதி வலமாக எடுத்து வரப்பட்டு பரிவார மூர்த்திகளுக்கும் மூலமூர்த்திகளுக்கும் அபிடேகம் நடைபெறும் கும்பம் தூக்குவோர் வெண்சாமரை வீசுவோர் முத்துக்குடை பிடிப்போர் என்பவர்களுக்கெல்லாம் வாய்ச்சீலை கொடுப்பது கோவில் கடமை புரியும் கட்டாடியின் பொறுப்பு சங்கற்பம் இருந்தவர் பிரதான கும்பத்தை தூக்குவது வழக்கம். பிரதான கும்பம் உள் வீதிவலமாக வந்து மூலஷ்த்தானத்திற்கு நேரே வந்ததும் அதற்கு மலர் அஞ்சலி செலுத்தி தீபராதனை காட்டி மூலஸ்த்தாகத்துள் எடுத்துச் செல்வர் முதலில் மூலமூர்த்திக்கும் பின்னர் முறையே நாக தம்பிரான், நவக்கிரகம், வைரவர் என்பவற்றுக்கும் அபிஷேகம் நடைபெற்று முடியும். அபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் அபிஷேக பூசைக்குரிய பூசை வட்டா பூசைக் காரரிடம் வழங்கப்படும். அவ்விட்டாவினுள் மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் வைக்கப்பட்ட வாசானை சந்தன பொட்டின் மீதி இருக்கும். அதனை அடியவர்கள் பலரும் பக்குவமாகவும் பக்தியோடும் தம் செற்றியில் பொட்டிட்டுக் கொள்வர். இதன் பின்னர் திருவிழா பூசைகளும் கிரிகைகளும் நடைபெறும். நேர இடை வேளையினைப் பொறுத்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சமயசம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறும். வசந்த மண்டப விசேட பூசையினைத் தொடர்ந்து. சுவாமி பிள்ளைத் தண்டில் உள்வீதி வலம் வருவார் 3ம் திருவிழாவில் இருந்து சுவாமி வெளிவீதி சுற்றுவதும் நடைபெறும் சுவாமி வெளிவீதிக்காக மதிற்படியை தாண்டும்.

போது ஒவ்வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு தேங்காயாக மூன்று தெங்காய்கள் மதிற்படியில் உடைக்கப்படும். முதலில் பிள்ளையாரும் அவரைத் தொடர்ந்து சிவன் உமையும் பின்னர் முருகப்பெருமானுடன் வள்ளி தெய்வயானையும் வருவர். பிள்ளையாரை எலி வாகனத்திலும் சிவன் உமையை எருத்து வாகனத்திலும் முரகனோடு வள்ளி தெய்வயானையும் மயில் வாகனத்திலும் வைத்து முத்துக் குடை நிழல் கர மின் ஒளி அலங்காரம் செய்து ஆடவர்கள் தமது தோளில் சுமப்பதே பெரும்பான்மையான வழக்கம் மூன்று வாகனங்களுக்கும் மூன்று தேங்காள் உடைத்து மடை வைத்து அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டியம் கூறி எச்சரிக்கை செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஓம் ஓம் என்று சங்கொலி ஒலிக்க அரோகரா என்ற கோசம் வான் முகட்டைக் கிழிக்க நடு நாயகமான பின்னையாரை முதலிலம் அவருக்கு வலப் புறத்தில் இரண்டாவதாக சிவன் உமையையும் இடப் புளத்தின் முருகப்பெருமானையும் தூக்கி ஒரே சமனாக ஆடி அசைத்து சுவாமிகளின் திருவிழா ஆரம்பமாகும்.

கொடி குடை ஆலவட்டம் சூரிய சந்திரர் முதலான சின்னங்கள் முன்னே செல்லும் மூன்று சுவாமிகளுக்கும் மூன்று வெண்சாமரைகள் கவரி வீசும் பெண்கள் எல்லாம் தமது நேர்கடனை நிறைவேற்ற தலையில் கற்பூர தீச்சட்டி ஏந்தி வருவர் தீப் பந்தம் சுழற்றுவோர் பந்தம் சுழற்றிவர ஆனந்த மேலீட்டால் பக்திப் பரவசத்தில் பாடுவோர் பாடிவர கரககாவடி ஆட்டங்களிளும் நடைபெறும் வான வேடிக்கைகளும் பட்டாசு வெடிகளும் மெருகூட்டும் வடக்கு வீதியில் மாமியார் மூலையில் சுவாமி சற்று நேரம் இழைப்பாறும் போது நாதஸ்வர மேளக் கச்சேரி நடைபெறும் வடகிழக்கு மூலையில் சுவாமிக்கு பட்டுச் சாத்தி திருமுறை ஓதப்படும். மூலஸ்த்தானத்திற்கு நேரே சுவாமி வந்ததும் சங்கூதுவொர் மேளம் அடிப்போர் கொடிகுடை முதலானவற்றை சுவாமிகளை மும்முறை சுற்றி வலம் வரவர். அவர்களுக்குரிய சன்மானம் வழங்கப்படும். பின்னர் திருவிழா முட்டுன்றி முடிவுற்றமைக்காக அட்டதிக்கு பாலகல்களுக்கு கட்டியம் கூறி வாகனத்தை கீழே இறக்குவர்.

முதலிலே பிள்ளையாரை வாகனத்தில் இருந்து எடுத்து கிழக்கு நோக்கிய பார்வையில் திருப்பி எடுத்து பிள்ளைத் தண்டினே பிடித்துக் கொண்டு இடம் வலமாக அசைத்து அசைத்து ஆலயத்தின் உள்ளே வசந்த மண்டபத்திற்கு எடுத்துச் செல்வர். அப்Nபுhது வெளி மண்டப முன் முகப்பிலே தண்ணீர் வைத்திருந்து குரக்கள் ஐயர் சுவாமி தூக்குவோர் பாதங்களை கழுவி விடுவது வழக்கம் பிள்ளையாரைத் தொர்ந்து சிவன் உமையும் அதன் பின்னர் முருகப்பெருமானும் இதே பிரகாரம் வசந்த மண்டபத்தைச் சென்றடைவர். அங்கு பஞ்சாரத்தியுடன் தீபாராதனை முடிவுறும் இத்துடன் திருவிழா நிறைவுறும் பின்னர் பூசைக்குரிய பிரசாதங்கள் பகிரப்படும்.

 

மேலே நாம் கூறியது சாதாரணமான இயல்பான திருவிழா நடைமுறை பற்றிய விளக்கமாகும். குடும்பகாரர் முத்துச் சப்பறம் எடுத்திருந்தால் அது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமிகளை வெளி வீதியில் அதனுள் வைத்து திருவிழா சுற்றுவதும் உண்டு. ஒரு சப்பறம் மட்டும் எடுத்தால் அதனுள் பிள்ளையாரை அமரச் செய்வர். உழவு இயந்திரம் அதனை இழுத்துச் செல்லும் அதன் இரு மருங்கிலும் ஏனைய இரண்டு சுவாமிகளும் எருத்து வாகனத்திலும் மயில் வாகனத்திலும் வபனி வருவர் சில வேளைகளில் முத்துச் சப்பறம் இரண்டு மூன்று என்று அதிகரிப்பதுவும் உண்டு. குடம்ப ரீதியான திருவிழாக்களில் ஒருவரை விட மற்றவர் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆவர்வத்தில் ஒரு போட்டியொன்று காணப்படுவது இயல்பேயாகும். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதிற்கு ஏற்ப ஒவ்வொரு குடம்ப உறுப்பினர்களும் வால் முறுக்கி விரிந்து கட்டிக் கொண்டு நிற்பர். மூன்றாம் திருவிழா நடைபெறும் வேளையில் நான்காம் திருவிழா குடும்பத்தினர் கோவிலடி நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து தம் குடும்ப உறுப்பினர்களை ஓர் இடத்தில் கூட்டி இரகசிய மந்திர ஆலோசனையுடன் தமது திருவிழா சம்பந்தமான இறுதி ஏற்பாடுகளை முடிவு செய்து கொண்டு தீவிரமான செயற்பாட்டில் இறங்கிவிடுவர்.

இதே போன்று நான்காம் நாள் திருவிழாவிற்று ஐந்தாம் நாள் திருவிழாவினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவர். நடைபெற்ற இரண்டு திருவிழாக்களையும் விட தமது திருவிழாவை சிறப்பாக்குவதற்கு முடிவு செய்து செயலில் இறங்குவர். ஐந்தாம் நாள் திருவிழாவன்று ஆறாம் நாள் திருவிழாவினர் கூடி ஆலோசனை செய்து செயற்படுவர். ஆறாம் நாள் திருவிழா அன்றிரவு ஏழாம் நாள் திருவிழாவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவர். நடைபெற்று முடிந்த திருவிழாக்களை விட சிறப்பாகச் செய்வது பற்றி ஆலோசனை நடத்துவர். எட்டாம் நாள் திருவிழா குடும்பத்தினர் என்னன்ன செய்வார்களோ என்று உழவறிந்து அதற்குச் சமமாக செய்துவிட திட்டம் தீட்டிச் செயலில் ஈடுபடுவர். ஏழாம் நாள் திருவிழா அன்றிரவு எட்டாம் நாள் திருவிழா குடும்பத்திற் முக்கிய உறுப்பினர்கள் கோவிலில் ஒன்று கூடுவர். மூன்றாம் நாள் தொடக்கம் ஏழாம் நாள் வரை நடைபெற்ற திருவிழாக்களை விட தமது திருவிழா சிறப்பாளதாக இடம் பெறவேண்டும் என்பதில் கரிசனையாக இருப்பர்.

இயன்ற அளவு அலங்கார வேலைப்பாடுகளும் மின் அமைப்புகளும் புதிது புதிதாக மாற்றி அமைத்து சிறப்புச் செய்வர்.

ஒன்பதாம் நாள் திருவிழாவும் தீர்த்தமும் ஆறு குடம்பத்தினருக்கும் பொதுவானது என்பதால் குடும்ப திருவிழாவிற்கு இருந்த அக்கறையை வி கூடடி அக்கறையும் பொதுவாக ஒன்றிணைந்த கூட்டுச் செயற்பாடும் காணப்படும். இறுதித் திருவிழாவின்று அயலூர் அடியார்களின் வருகை பெரும் அளவில் காணப்படும். கடைக்காரர்கள் கடைக்குரிய இடம் கேட்டு நிற்பர். ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டுவதில் நிருவாகத்தினர் பல பக்கமும் ஓடி ஆடித் திரிவர். ஏற்கனவே நடைபெற்று திருவிழாக்களின் போது ஏற்பட்ட உடல் சோர்வு, உளச் சோர்வு என்பவற்றோடு செயலாற்றுவார். இதனால் இறுதித் திருவிழாவன்று நடைபெறவேண்டிய பல நிகழ்ச்சிகள் பல குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. சாரணர்கள் ஆலய உள்ள வீதியிலும் வெளி வீதியிலும் சேவையில் ஈடுபட்டிருப்பர். தொண்டர் படையினர் ஒழுங்கையும் அமைதியையும் கணிகாணிப்பர். அன்னதான சபையினர் அதற்கான பணிகளை செய்வர். வாகனப் பாதுகாப்பு தனியான ஓர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும். கடை ஒழுங்குகளும் பூசைப் பொருள் விற்பனையும் வேறு வேறாக நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் மற்றோர் குழுவினால் நடாத்தப்படும்.

ஒன்பதாம் நாள் திருவிழா வெளி வீதி சுற்றி வரும் போது மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அன்னை பிதா உலகம் என்ற அரிய தத்துவத்தை மிக எளிமையாக உணர்த்துகின்ற இத் திருவிழா மேலும் பல உண்மைகளை உள்ளடக்கி இருப்பதை அத்திருவிழாவின் போது உணரமுடியும்.

பக்தி சுவையோடு நடைபெறுகின்ற இத்திருவிழாவும் ஒரு மன்றத்தின் பொறுப்பில் நடைபெற்று வருகின்றது. இறுதி நாள் திருவிழாவன்று பல்வேறு விதமான பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் வருவர். ஆலய நிருவாகம் தீர்மானித்த விதத்தில் வெளி வீதியில் கடைகளுக்குரிய இட ஒதுக்கீடு நடைபெறும். இனிப்புப் பண்டங்களை விற்கின்ற மிட்டாய் கடைகளோடு அலுமினம் வெண்கலம் முதலிய உலோகப் பொருட்களை விற்கின்ற கடைகளும், உணவுக் கடைகள், தேநீர் கடைகள், விளையாட்டு சாமான்கள் விற்கும் கடைகள், அலங்காரப் பொருட்கள் இருக்கும் கடைகள், படக் கடைகள், புத்தகக் கடைகள், பெட்டி, பாய், உடுப்பு, தலையணி, பொம்மை முதலான கடைகளும் கடலை, கச்சான் கொட்டை கடைகளும் பலாப்பழம், விளாம்பழம், றம்புட்டான்பழம், அன்னாசிப்பழம், கடுபுளியம்பழம் முதலான பழங்களை விற்கும்
கடைகளும், கரும்பு விற்பனை நிலையங்களும் ஐஸ்கிறிம் வேன்களும் பெட்டிக்களுமாக கோவில் வீதி நிரம்பிவிடும். அப்பம், பிட்டு அவித்து விற்போரும் ஒரு புறத்தில் தமது தொலை நடத்துவர்.

முதல் உதவி சிகிச்சைக்கான நிலையமும் திறக்கப்படும். சாரணர்கள் தமது பாசறைகளை அமைத்துக் கொள்வர். அன்னதானம் நடத்துவோடும் தமக்கென ஓர் இடத்தை ஒழங்கு செய்து கொள்வர். ஆலய நிருவாகத்தினரும் தமக்கென ஒரு காரியாலத்தை அமைத்துக் கொள்வர் ஏனைய திருவிழாக்கள் அனைத்தையும் வி இத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருந்த தத்தமது கருத்துக்களை கூறுவதோடு தம்மால் இயன்ற செயல்களையும் சேவையாக செய்து சிறப்பம்சமாகும். திருவிழாவில் நிருவாகத்தினரோடு இணைந்து சில பொறுப்புகளை பொறும் பேற்று நடத்துகின்ற தனிப்பட்டவர்களும் குழுக்களும் மன்றங்கள் சங்கங்கள் என்பகவும் தத்தமது கடமைகளை சீராகவும் சிறப்பாகவும் செய்து ஊர்மானம் காப்பாற்றப் பட வேண்டும் என்ற முனைப்பில் கண்ணியமாகவும் கௌரவமாகவும் செயற்படுவர்.

அயலூரில் திருமானம் முடித்திருப்பவர்களும் வெளியூர் வெளிநாடுகளில் தொழில் புரிவோரும் குடி வதிந்திருப்போரும் திருவிழாக் காணவும் தீர்த்தம் ஆடவும் ஊரக்கு வருவர். உற்றார் உறவினர் நண்பர்கள் என்ற வகையிலும் பலர் வருவதுண்டு. இதனால் ஊர் முழுவதும் பரபரப்பாகவும் பரவசமாகவும் கலகலப்பாகவுமு; காணப்படும். பெறுமதியான ஆடை அணிமணிகளுடன் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்களின் அழகும் அன்பளிப்பும் அலாதியாக இருக்கும். ஏனைய திருவிழாக்களை போன்று இந்த திருவிழா நடைபெற்றாலும் சனக் கூட்டமும் நேர்த்திக் கடன் நிறைவேற்றுவொரின் தொகையும் அதிகரித்து காணப்படும். ஒன்பதாம் நாள் திருவிழா காலையில் இருந்து காவடி எடுப்போரும் வேலாயுதம் எடுப்போரும் அங்க பிரதட்சனை பண்ணுவொருமாக பலர் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேந்நுவர். தலை முடியை தானமாக கொடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றுவருக்காக சிகை அலங்கார நிலையமும் திறக்கப்ட்டு இருக்கும் காவடி வேலாயுதம் சூலாயுதம் முதலியனவும் ஆலய நிருவாகத்தினால் குறந்த கட்டணத்தில் விநியோகிக்கப்படும். இத் திருவிழா ஊர்வர்களுக்கு மட்டும் அன்றி உலகத்தவர் அனைவருக்கும் சொந்தமான திருவிழா போன்றே நடைபெறுவது சிறப்பான விடயமாகும்.

 

தீத்தோற்சவம் -:

ஆனி உத்தர நட்சத்திரம் தீர்த்தம் ஆடுவதற்குரிய நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராசப் பெருமானுக்கு மிகச் சிறப்பான அபிடேகம் நடைபெறும். இப் பிள்ளையார் கோவிலிலும் ஆனி உத்தரம் தீர்தோற்சவ தினமாக உள்ளது. தீர்த்தம் ஆடும் தினத்தன்று அதிகாலையில் வசந்த மண்டபத்தில் விசேட கு10சைகளும் தீபாராதனைகளும் நடைபெறும் குருமாரும் பணியாளர்களும் நிருவாகிகளும் அடியார்களும் மிகச் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செயல்களில் ஈடுபடுவர். வசந்த மண்டபத்திற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும். ஆலயத்தில் இதற்கென பிரத்தியேகமாக உள்ள ஒரு உரலும் உலக்கையும் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும். திரு நீறு மஞ்கள், சந்தனம், குங்குமம் என்பவற்றை பூசியும் பட்டுகள் கட்டியும் மலர்கள் மாவிலை என்பன செருகியும் அலங்கரிப்பர். வெள்ளை விரித்து அதன் மீது உரலினை நட்டு வைப்பர். அதனைச் சுற்றி மாக்கோலம் இடுவர்.

 

சுவாமி எழுந்தருப் பண்ணுதல் -:

ஆலயங்களிலே அந்தந்த தெய்வங்களுக்குரிய அஸ்த்திர தேவா மூல மூர்த்தியின் பிரதி நிதியாக எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடவர். ஆனால் இங்கு அஸ்த்திர தேவருக்குப் பதிலாக மூலஸ்த்தானத்துள் இருக்கும் சிறிய பிள்ளையார் உருவம் ஒன்றையே எடுத்துச் செல்வது வழக்கம். அடிவார்களின் தரிசனத்திற்காக பஞ்ச லோகத்தால் ஆன விநாயகர் விக்கிரகம் ஒன்று அண்மையில் கருவறையுள் பிம்பதாபனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்திய காலங்களில் உருவத்தால் சிறிய பிள்ளையார் விக்கிரங்கள் பல கருவறையுள் வைக்கப்பட்டு இருந்தன அவை பூசையின்போது வைக்கப்படும். மலர்களுள் மறைந்து போவதே வழக்கம். இப்பொழுது தீர்த்தம் ஆட புறப்படும்போது ஆலய பிரதம குரு தீர்த்தக் கலசத்தினுள். அப்பிள்ளையார் விக்கிரங்களுள் ஒன்றை பக்தி சிரத்தையோடும் பணிவோரும் பிராத்தனை செய்து எடுத்து வைப்பார். கலசத்தை அழகியபட்டுப் பீதாம்பரத்தால் மூடிக் கொள்வார். பலசத்தை தனது நெஞ்சோடு அணைத்து தூக்கிக் கொள்வார் கருவறைப்படியில் இருந்து வசந்த மண்டம் வரை நிலபாவாடையாக சிலை விரிக்கப்பட்டு இருக்கும். பிரதம குரு கலசத்துடன் கருவறைப்படியை தாண்டியதும் இதற்கென உள்ள விசேட கம்பளத்தினால் அவரை பாதாதி கேசமாக மூடிக் கொள்வர். மணியோசை சங்கோசை தவிலோசை நாதஸ்வர மேளவாத்தியம் அடியார்களின் அரோகரா கோசம் என்பவற்றோடு தீவர்த்தி வெளிச்சத்தில் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வந்துசெர்ப்பர். அதி அற்புத சக்திவாய்ந்த பிள்ளையாரின் மகிமையை அப்போது மலர் உணர்வர் வசந்த மண்டப திரை மூடப்பட்டு திருவாசியுடன் வீற்றிருக்கும் பிள்ளையாரின் திருவைற்றுடன் இக் கலசத்தையும் பட்டுச் சீலைகளினால் இணைத்துக் கட்டி விடுவர்.

 

திருப்பொற் சுண்ணம் இடித்தல்

இதனை 'சூர்னோற்சவம்' என்றும் அழைப்பார். ஐந்தொழில்களுள் ஒன்றான மறைத்தல் தொழிலை குறிப்பாக இது நடைபெறுகிள்றது. சுத்தமான மஞ்சற் துண்டுகளை தெரிந்து வைத்திருப்பர். பாலறுகும் எடுத்து சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பர். பொற்சுண்ணம் பாடதொடங்குவதற்கு முன்னர் 'தோற்றம் துடி அதனில்' என்பன நிநைவூட்டும் வகையில் மேளத்திற்கு ஒரு பூசை நடைபெறும் இதனை பெயரிடதானம் என்று சொல்வர். வெள்ளை விரித்து அதன் மீது மேளத்தை வைப்பார். மேளம் அடிக்கின்ற தடியை மாவிலையோடு சேர்த்து பட்டோன்றிநால் சுற்றி மேளத்தின் மீது வைப்பார். புண்ணியா வாகனம் செய்யப்பட்ட கலசநீர் தெழித்து புனிதமாக்குவர் அதற்கு மணி அடித்து தீபாராதனையும் செய்வர். பின்னர் பிரதம குரு இடது காலை மடித்து முழந்தாளில் நின்று வலது காலை ஓன்றிய நிலையில் முட்டிக்கால் பாய்ச்சலில் நின்று முறை மூன்று முறை மேளம் அடிக்கும் தடியினால் மேளத்தை கட்டுவார். பின்னர் மேளகாரருக்கு விபூதிப் பிரகாரம் அணிவிக்கப்படும். புது வஸ்த்திரமும் உடுத்துக் கொண்டு அல்லது தோளில் போட்டுக் கொண்டு மேளகாரர் மேளத்தை பொறுப்பேற்றுக் கொள்வார்.

பின்னர் குருக்கள் பல மந்திரங்களையும் தோத்திரங்களையும், கீர்த்தனைகளையும் தாழ லயத்தோடு ஓத தவில் வித்துவான் அதற்கேற்ப தவில் வாசிப்பான் அது முடிவுற்றதும் திருப்பொற்ற சுண்ணம் இடிப்பதற்குரிய அலங்கரிப்பட்ட உரல் உலக்கைக்கு பூசை நடைபெறும். நறிக்கி வைக்கப்பட்ட மஞ்சளும் அறுக்கும் உரலினுள் போடப்படும். பூப்பு நிலை அடையாத சிறுமியரே பொற் சுண்ணம் இடிப்பர். அவர்களும் அவ்விடத்தில் நிற்பர். திருப் பொற் சுண்ணம் பாடுவதற்கு பொருத்தமும் உரிமையும் உடைய இருவர் தயாராக நிற்பர். இவர்களுக்கெல்லாம் விபூதி பிரசாரதம் வழங்கப்படும். சுண்ணம் இடிப்போர் வசந்த மண்டபத்திற்கு நேரே கிழக்கு நோக்கிய முகமாக

உலக்கையைப் பிடித்துக் கொண்டு நிற்பர். இரண்டு சிறுமியர் இடிப்பதே பொதுவான வழக்கம் சில காலங்களில் எண்ணிக்கை மாறு பட்டதும் உண்டு. திருப்பொற்சுண்ணம் பாடுவோர் மேற்கு நோக்கிய முகமாக நிற்பர். அடியார்கள் சுற்றி வளைத்து நிற்பர். பூர்வாங்க கிரியைகளும் பூசையும் முடிவுற்றதும் மாணிக்க வாசக சுவாமிகள் பாடிண திருப்பொற்சுண்ணப் பாடல்கள் பாடப்படும்.

'தொல்லை இரும் பிறவி' – கற்பாந்தகாலம் என்ற திருவாசக சாத்துக் கவிக் பாடல்களைப் பாடி பின்னர் 'முத்து நல் தாமம் பூமாலை தூக்கி' என்ற பாடல் வரிகளில் முதல் இரு வரிகளை ஒருவர் பாட அடுத்த இரு வரிகளை மற்றவர் பாட கடைசி வரியான 'ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே' என்பதை இருவரும் இணைந்து மும்முறை பாடுவர். அப் பொழுது கற்பூர நீராஞ்சனம் காட்டப்படும். சிறுமியர் உலக்கையை தூக்கி மூன்று முறை இடிப்பர். இவ்வாறே ஏனைய பாடல்களுக்கும் தொடர்ந்து நடைபெறும். பாடல்கள் முடிவுற்றதும் நன்றாக இடிபடாத வித்து அதனை நன்றாக இடித்து தாம்பாலத்தில் எடுத்துக் கொள்வர். அழகியபட்டினால் மூடி வைத்திருப்பர். வடிமைபோல் வசந்த மண்டப பூசைகள் முடிவுற்ற சுவாமி உள்வீதி சுற்றி வந்து தீர்த்தம் ஆட ஆயத்தம் ஆவார்.

 

நேர்த்தி கடன் நிறை வேற்றுதல் -:

அடியார்களின் பலர் பல விதமான நேர்த்தி கடன்களை வைத்திருப்பர். அங்கப் பிரதட்சனை காவடி எடுத்தல் வேலாயுதம் எடுத்தல் கற்பூரச் சட்டி எடுத்தல் சுவாமி தூக்குதல் என்று பல வகைப்படும் தமது வசதி கருதியும் இடம். பொருள் ஏவல் என்பவற்றைக் கருத்தில் கொண்டும் தீர்த்தம் ஆடும் தினத்திற்கு முன்பே பலர் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிடுவதும் உண்டு.

என்றும் அநேகர் தீர்த்தம் ஆடும் தினத்தன்றே அதனை நிறைவேற்ற விரும்புகின்றனர். அங்கப்பிரதட்சனை கற்பூரச் சட்டி எடுத்தல் என்பன ஆலய வீதியில் நடைபெறுவதே பெருவழக்கு சிலர் கல்லடிப் பிள்ளையார் ஆலயம் கொம்புச் சந்தி என்பவற்றில் இருந்தம் தம் நேர்த்திக் கடனை ஆரம்பிப்பர்.

காவடி வேலாயுதம் எடுத்தல் -:

கிராமத்தின் மத்தியில் அமைந்தள்ள பள்ளியங்கட்டு எனப்படும் கொம்புச் சந்தி அம்மன் ஆலயத்தில் இருந்தே இது ஆரம்பமவது வழக்கம் தீர்த்தோற்சவ தினத்தன்று கிராமத்தில் உள்ள அம்மன் பூசாரிமார் பலரும் அவ்விடத்தில் கூடுவர். வாயலகு காய்ச்சுதல் செடில் எனப்படும். முள்ளுப் பாய்ச்சுதல் உருவேற்றுதல் தார் மாய்ச்சு கொடுக்குக் கட்டுதல் என்பவைகளில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர்கள் அங்கு வந்து சேர்விர். காவடி சிந்துகளை பாடக் கூடியவர்களும் தாள வாத்தியக்காரர்களும் ஒன்று கூடுவர். காவடி எடுப்பவர்கள், வேலாயுதம் எடுப்பவர்கள் இவர்களை உதவிக்கு வரும் படி சம்பிருதாய பூர்வமாக அழைப்பு விடுப்பதுண்டு தீர்த்தம் ஆடும் நேர்த்திற்கு கோவிலடியை சென்றடைந்து சுவாமியுடன் தீர்த்தக் கேணி அடிக்குச் செல்லக் கூடிய வகையில் பள்ளியங் கட்டில் வேலைகள் ஆரம்பமாகும் பெண்கள் வேலாயுதம் எடுப்பர். ஆண்கள் காவடி எடுப்பர் பெண்கள் உடுத்திருந்த சீலையோடு நீராடி வந்து முடி நுட்டப்பட்ட தேங்காயின் மீது வேலாயுதத்தை குத்தி வேப்பிலை கும்பத்தோடு அதனை தூக்கிக் கொள்வர். வாயலகு பாச்சப்படும். காவடி எடுக்கும் ஆண்களும் உடுத்திருக்கும் உடுப்புகளோடு முழுகிக் கொள்வர். பாலர்கள் பாற்காவடி எடுப்பர். பெரியவர்கள் முள்ளுப் பாய்ச்சு வாயலகு இட்டு காவடி எடுப்பது சிலர் தூக்குக் காவடி பறவைக் காவடி எடுப்பது உண்டு காவடி எடுப்போர் தமது நேர்த்திக் கடனான வேலாயுதத்தை எலுமிச்சம் படித்தில் குத்தி காவடியின் நடுக்கம்பிலே கட்டிவைத்துக் கொள்வர். இவர்கள் எல்லோரும் தனித்தனியாக ஒவ்வொரு பூசைப் பெட்டி கொண்டு வந்திருப்பர்.

அரிசி பழம் பாக்கு வெற்றிலை கற்பூரம் ஊதுபத்தி ஒரு தேங்காய் தட்சனை மலர்கள் எல்லாம் அதனுள் இருக்கும். பள்ளியங்கட்டில் வெள்ளை விரித்து இந்தப் பூசைப்பொருட்கள் எல்லாம் தனித் தனிணாக மடை வைக்கப்படும். ஆண்கள் எல்லாம் கொம்புச் சந்திக்கு நேரே உள்ள வீதியில் இருபறமும் வெள்ளை விரித்து குப்புற படுக்கவைக்கப்படுவர். அம்மனுக்கு பூசை நடைபெறும் வேளையில் எல்லோரும் எழுந்து நின்று கடவுள் வணக்கம் செய்வர். அப்போது பூசாரிமாரும் மந்திரவாதிகளும் நேர்த்திக் கடன் நிறைவேற்றுவொருக்கு உரு ஏத்த தொடங்குவர். பலருக்கு தீபாராதனை காட்டிய உடனையே தானாக உரு ஏறி விடுவதுண்டு. அந்த வேளையிலேயெ வாயலகு குத்துதல் முள்ளுப் பாய்ச்சுதல் என்பன நடைபெறும். உரு ஏறாதவர்களுக்கு சிரசிலே நீர் ஊற்றி திருநீற்றை நெற்றியிலே வட்டமாக வலது கைப்பெருவிரலால் சாத்தும் போது மந்திர உற்சாடனத்தில் உருவேறி உடலில் நடுக்கம் ஏற்பட்டு ஆடத் தொடங்குவது அதிசயமாகவும் அற்புதமாகவும் இருக்கும். இந்த வேளையிலே பல விதமான வாத்தியங்களும் பாடல்களும் இடம் பெற இவ்விடத்தில் பக்தியோடு கூடிய பரவசமான காவடியாட்டம் நடைபெறும். பயமும் பக்தியும் கலந்த நிலையில் பாத்திருக்கும் அடியவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடியும் தங்கள் நேர்த்தி கடனுக்கு ஏற்ப முதகிலே குத்தப்பட்டிருக்கும் முட்களின் எண்ணிக்கை வேறுபட்டு இருக்கும் தோழிலே முட் பாய்ச்சி இருக்க வாயிலே அலகு குத்தி இருக்க உருத்திராட்சை மாலைகளை கழுத்திலும் கையிலும் அணிந்திருக்கும் அடியவர்கள் மயில் தோகையுடன் கூடிய அழகிய காவடிகளை தோளிலும் கழுத்துப் பிடரியிலும் கைகளிலும் பிடித்துக் கொண்டு உருவேறிய ஆவேசத்துடன் பிள்ளையார் கோவிலை நோக்கி விரைந்து செல்ல முற்படும் போது செடில் பிடித்து இழுக்கும் அடியவர்களின் நிலை பரிதாபமாக இருக்கும்.

தைரியசாலிகளான செடில் பிடிப்போர் பலர் ஆவேசம் வந்த காவடிக்காரர்களிடம் தோற்றுப் போவதை நாம் கண்னுடாக காணலாம். இவ்வாறாக நூற்றுக் கணக்கான வேலாயுதம் எடுப்போரும் காவடி எடுப்போரும் கொம்புச் சந்தியில் இருந்து பிரதான பாதை வழியாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஆலயத்தை வந்தடைவர். கொம்புச் சந்தியில் இருந்து புறப்படும் போது அங்கு உள்ள கல்லில் ஒரு தேங்காய் உடைத்து புறப்படுவர். அங்கிருந்து வருவோரில் சிலர் கல்லடிப் பிள்ளையார் ஆலயம் சென்று அங்குமோர் தேங்காய் உடைப்பர். ஆலயத்துக்கு செல்லும் வழியால் உள்ள நாகதம்பிரன் ஆலயத்துக்கும் சிலர் தேங்காய் உடைப்பர். சிலர் காவடிகளும் வேலயுதக்காரரும் இங்கிருந்து சென்று வெளி வீதி சுற்றி ஆலயத்துள்லே செல்லும் போது அங்குள்ள கல்லில் தேங்காய் உடைத்து உள்வீதி சுற்றி வந்து அதற்குரிய தட்சனை முதலியவற்றை செலுத்தி தமது வேலாயுதம், காவடி என்பவற்றை ஒப்படைத்து விட்டு சுவாமியுடன் தீர்த்தம் ஆடச் செல்வதும் உண்டு.

சிலர் தேங்காய் உடைத்து உள்வீதி சுற்றிவந்து சுவாமியுடன் தீர்த்தம் ஆடிய பின் திரும்பி வந்து தமது நேர்த்தி கடனை ஒப்படைப்பதும் உண்டு. வாயிலே குற்றிய வேலாயுதம் முதுகிலே குற்றிய முள் என்பவற்றை கழற்றிய பின் அவற்றுக்கு மருத்தாக பிள்ளையார் கோவில் திருநீறே பயன்படுத்துவது வழக்கம். அந்த திருநீற்றுடன் அக்காயங்கள் ஆறிப்போவது அற்புதம்.
தீர்த்தம்

வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி உள்வீதி சுற்றி மதிற் படியை தாண்டும் போது வழமைப் பிரகாரம் தேங்காய் உடைக்கப்படும். வெளி வீதியில் இருக்கும் வாகனங்களில் உரிய முறையில் படி சுவாமிகள் வைத்துக் கட்டப்படும். அடியார்களின் தோளில் சுவாமி தீர்த்தம் ஆட எழுந்தருளுவார். காலை வேளையில் கதிரவனின் பொற்கிர கணங்கள் எழுந்தருளி மூர்த்திகளில் படும் ஒளி அடியவர்களின் மன இருள் நீக்கி மகிழ்ச்சி அழிப்பதாக இருக்கும். காவடிகள் முன்னால் ஆடிச் செல்ல அங்க பிரதட்சனைண செய்வோர் உருண்டு செல்ல கற்பூரச் சட்டி ஏந்துவோர் வரிசையாக செல்ல உணர்ச்சி பூர்வமான ஒரு நிகழ்வு நடைபெறும். புனிதமாக பேணிம் பாதுகாக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் பழிங்கு போன்ற நீர் தெழிந்திருக்கும் பாதுகாவலுக்கு தொண்டர்களும் சாரணர்களும் சுற்றி நிற்பர். அடியவர்கள் நாற்புறமும் காத்து நிற்பர். தீர்த்தக் கேணியின் வடபுறத்திலே கேணியின் நடுப் பகுதிக்கு நேரே அமைந்துள்ள அழகிய இழைப்பாறி மண்டபத்திற்கு சுவாமி சென்றடைவார்.

வாகனத்தில் இருந்த உற்சவ மூர்த்திகள் திருவாசியுடன் பிள்ளைத் தண்டிலே எடுத்துச் செல்லப்பட்டு இழைப்பாறு மண்டபத்தள் அழகுற அமைக்கப்பட்டு இருக்கும் தனித்தனி பீடங்களிலே வைக்கப்படுவர். கிழக்கு மேற்கு தெற்கு என்கின்ற மூன்று புறங்களும் திறந்திருக்கும் அமைப்புடைய இந்த இழைப்பாறு மண்டப வீதியிலே அடியார்கள் அமந்திருக்க தீர்த்தம் ஆடுவதற்குரிய பூர்வாங்க கிரியைகள் பல இவ்விடத்தில் நடைபெறும். ஆலய நிருவாகிகளின் சார்பில் குடும்பத்தின் தலைவர்களான வண்ணக்குமார் ஆறுபேர் இவ்விடத்தில் சங்கற்பம் இருப்பார் தொடங்கப்பட்ட திருவிழா இடையூறின்றி நிறைவேறியதைப்போன்று இந்த தீர்த்தோற்சவமும் இந்த வருடம் இந்த மாதம் இந்த நாளில் இந்த நட்சத்திரத்தில் இனிதே நிறைவேறுவதற்கு எல்லாம் வல்லி விக்கினேசுரப் பெருமானுடைய திருவருளை வேண்டி சங்கற்பம் இருப்பர். இவ் வேளையிலே ஏற்கனவே இடிக்கப்பட்ட திருப்பொற்சுண்ண மஞ்சள் தூளை அங்கிருக்கும் அடியவர்கள் எல்லோருக்கும் தொண்டர்கள் வழங்குவார்கள்.

அதனை உச்சந் தலையிலே தேய்த்துக் கொண்டு அடியவர்கள் எல்லாம் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையாரை மனதிலே நினைத்துக் கொண்டு கிரியைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு உற்சவ மூர்த்திகளின் அழகையும் அஅருளையும் பருகிக் கொண்டு இருப்பர். இழைப்பாறு மண்டப கிரியைகள் முடிவுற்றதும் பிள்ளையாரின் தொந்தி வயிற்றோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கலசத்தை பிரதம குரு எடுத்துவர உதவிக் குருமாரும் பணியாளர்களும் நிருவாகிகளும் அடியார்கள் சிலரும் முத்துக் குடையுடன் கேணியில் உள்ள படிக்கட்டு வழியாக தீர்த்தக் குளத்தினுள் இறங்குவர். உரிய இடத்தை சென்றடைந்ததும் எடுத்து வைத்த பின் அதனுள் இருக்கும் சிறிய பிள்ளையாருக்கு அபிடேகம் நடைபெறும். பால், தயிர், நெய், தேன் பலவிதமான பழ வகைகள் கரும்பு, இளநீர், சக்கரை, கற்கண்டு, சந்தனம், நல்லெண்ணெய் என்பனவாய பொருட்களால் அபிசேகம் நடைபெற்று அவையெல்லாம் தீர்த்தக் குளத்து நீருடன் சங்கமம் ஆகும். இவ்வேளையில் அடியவர்களும் காவடிக்காரர்களும் கட்டுப்பாட்டையும் மீறி தீர்த்தக்குளத்தினுள் இறங்க தொடங்குவர். தமது எண்கள் எல்லாம் நிறைவேற வேண்டும். நோய்கள், பிணிகள், துன்பங்கள், துயரங்கள் எல்லாம் நீங்கவேண்டும்.

சாந்தி சமாதானம் புரிந்துணவு நல் இணக்கம் மகிழ்ச்சி சுபிட்சம் என்பனவெல்லாம். பெருகவேண்டும். வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்ல மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் எங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் தீர்த்தோம் வினைகள்யாவற்றையும் தீர்த்தோம் என்று நெஞ்சில் நினைத்தும் வாயால் துதித்தும் அடியவர்கள் அரோகரா என்ற கோசத்துடன் தீர்தக்குளத்துள் இறங்குவர். பிரதமகுரு தீர்த்தக் கலசத்தை பட்டுச்சீலையினால் மூடி முன்று முறை நீரினுள் மூழ்கி எழும்புவார். அந்த வேளையில் தீர்தக் கேணியின் நீர் மேலே அள்ளி சீசப்படுவதோடு அடியார்களும் மூழ்கி தீர்த்தம் ஆடவர். சிறிது நேரத்திற்கு தீர்த்தக் கங்கையில் மழை பொழிவது போன்ற காட்சிதொன்படும்.

பிரதமகுரு தீர்த்தம் ஆடிய நீருடன் கலசத்துள் இருக்கும் பிள்ளையாரை எழுந்தருளி விக்கிரகத்தின் தொந்தி வயிற்றில் மீண்டும் இணைத்து கட்டிவிடுவார். பின்னர் அவ்விடத்தில் நடைபெறுவேண்டிய கிரியைகள் முடிவுற்றுதும் சுவாமிகளை வாகனத்தில் வைத்து கட்டிக் கொண்டு தீர்த்தக் கேணியைச் சுற்றிவந்து வெளி வீதியையும் சுற்றிக் கொண்டு வந்துசெர்வர் விரதங்கள் நிறைவுற்றதும் இடம்பெறும் தீர்த்தத்தில் அநேகமாக விரதாதிகளே தீர்த்தம் ஆடவர் விரதங்கள் தனித்துவச் சிறப்புடையவை அவை ஒவ்வொன்றும் குறிப்பட்ட சில குறிக்கோள் நிறைவேறும் பொருட்டு அனுட்டிக்கப்படுபவை வருடாந்த தீர்த்தம் பொதுவாக நோக்கங்களைக் கொண்டது. இதனாலேயே வருடாந்த தீர்த்தோற்சவத்தில் அநேகர் தீர்த்தம் ஆடுகின்றன.

 

திருப் பொன்னூஞ்சல் -:

சுவாமி தீர்த்தம் ஆடி முடிவுற்றதும் ஆலயத்திற்கு திரும்பி வருவதுக் கிடையில் திருப்பொன்னூஞ்சல் பலகை தயாராக இருக்கும். ஆரம்ப காலத்தில் இந்த நிகழ்வு மிகச்சிறிய அளவில் நிறைவேறியது. அநேகருக்கு, இது தெரியாது. தீர்த்தக் கலசத்தள் இருந்த விக்கிரகத்தை பலிபீடத்தினுள் ஊஞ்சலாட்டியது உண்டு. அக்காலத்தில் ஆண்களின் இடுப்பில் இருந்த பௌ;ளியால் ஆன அரை நான் கொடிகளை கையிறாககட்டி பொன்னுஞ்சல் பாடப்பட்டது. மாணிக்கவாசகர் சுவாமிகள் பாடிய 'சீரார் பவளங்கால் முத்தம் கயிராக' என்ற பொன்னுஞ்சல் பாடல் ஒன்பதையும் பாடி வந்தனர். பின்னர் உழுந்தருளி விக்கிரகத்தோடு பிள்ளையாரை மட்டும் பொன்னூஞசல் பலகையில் அமர்த்தி சந்தன மண்டபத்தினுள் பொன்னூஞ்சல் பாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வேளையில் பொற்சுண்ணம் இடித்த சிறுமியர் வெண்சாமரை வீசுவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. இத் திருப்பெற்சுண்ணப் பாடல்கள் சிவ பெருமானை நோக்கி பாடப்பட்டவையாகும். பிள்ளையார் திருவுருவத்தை ஊஞ்சலிலே வைக்கக் கொண்டு சிவ பெருமானுடைய பாடல்களை பாடுவது சர்ச்சைக்குரிய வினாக்களை தோற்றுவித்தது. ஏனைய ஆலயங்களில் பாடப்படுவது போன்று இத்தலச் சிறப்பு மிக்க பொன்னூஞ்சல் பாடல்களையும் சேர்த்துப் பாடுவது பிரச்சினைக்கு தீர்வாகும் என்று கருதப்பட்டது. இதற்கான முயற்சியில் இறங்கிய போது பிரபல கவிஞர் ஒருவரிடம் இருந்து பொன்னூஞ்சல் பாடல் கிடைத்தன பிள்ளையாரின் அனுமதியும் அனுக்கிகைமும் கிடையாத நிலையில் அப்பாடல்கள் காணாமல் போயின எங்கு போயின என்பது இன்றும் மர்மாகவே உள்ளது. இந்த நிலையில் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் மீதும் திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகப் பெருமாள் மீதும் மிக எளிமையானதும் இனிமையானதுமான பொன்னூஞ்சல் பாடல்கள் கிடைத்தன.

பலராலும் பொருத்தமானவை என இவை ஏற்றுக்கொள்ளப்பட்டபோது திருவிழாவில் உலா வந்த உற்சவ மூர்த்திகள் அனைவரையும் திருவாசியுடன் ஒரே பொன்னூஞ்சற் பலகையில் வைத்து பொன்னூஞ்சல் பாடினால் அது பொருத்தமாகவும் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் அமையும் என்ற கருத்து வலுப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் றீளமான பொன்னூஞ்சல் பலகையும் அதனை விரைவாக தொங்க விடுவதற்கு ஏற்ற வகையில் இரும்புச் சங்கிலிகளும் பொருத்தப்பட்டன. இப்பொன்னூஞ்சற் பலகையை நால்வர் தூக்கிப்பிடிக்க பொருத்தப்பட்டிருக்கும் சங்கிலிகளை ஒரு நிமிடத்தின் உள்ளேயே கொழவி விடலாம். இது அஎயவர்களுக்கு வியப்பூட்டும் செயலாக தென்படும். இப்பொன்னூஞ்சற் பலகைக்கு வெள்ளை விரித்து அலங்காரமும் செய்யப்படும். தீர்த்தம் ஆடி திரும்பி வந்த பிள்ளையார் முதலிலே வந்து பொன்னூஞ்சற் பலகையில் நடுநாயகமாக வீற்றிருப்பார். இரண்டாவதாக வந்த சிவன் உமை பிள்ளையாருக்கு வலப்புறத்தில் அமர்வர்.

மூன்றாவதாக வந்த முருகப் பெருமான் வள்ளி தெய்வயானை பிள்ளையாருக்கு இடது புறத்தில் அமர்வர். இவர்களை பொன்னூஞ்சற் பலகையில் அமர்த்தியபின் குருக்கள் மாரும் மற்றுள்ளோரும் தீர்த்தம் ஆடிய உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வருவர். இந்த சொற்ப இடை வேளையில் பொன்னூஞ்சல் பார்க்கவும் கேட்கவும் அடியார்கள் மண்டபத்தில் நிறைந்திருப்பர். வருடா வருடம் அடியார்களின் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே வருகின்றது இட வசதி போதாது என்பது எல்லோருக்கும் புரிகிறது. திருப்பொன்னூஞ்சல் பூசையின் போது தீபாரதனைக்குரிய தீபங்கள் பொன்னூஞ்சல் பாடுவோர் பொன்னூஞ்சல் ஆட்டுவொருக்குரிய கௌரவ காளாஞ்சிகள் மற்றும் ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்று முடியும். பிரதம குரு தீபாராதனை காடடி கிரியைகளை முடித்த பின் பொன்னூஞ்சல் பாடுவோர் பொன்னூஞ்சல் ஆட்டுவொர் வண்ணக்குமார் என்போருக்கு விபூதி பிரசாதம் கொடுத்த பின் திருப் பொன்னூஞ்ல் அவதாரிக என்று கூறுவரார்.

அப்பொழுது இத்திருப் பொன்னூஞ்சல் பாடல்களை இசையோடும் தான லயத்தோடும் பாடுவதற்குரிய குழவினர் பாடத் தொடங்குவர். ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்ற துதிப் பாடலை முதலில் பாடி 'தொல்லையிரும் விறவி' - கற்பாநீத காலம் என்ற சாத்துக் கவிப் பாடல்களை பாடி பொன்னூஞ்சற் பாடல்களை பாட ஆரம்பிப்பர். முதலிலே சுவாமி மாணிக்கவாசகர் திருவுத்தர கோசமங்கை என்னும் இடத்தில் வீற்றிருக்கும் சிவ பிரானையும் உமாதேவியையும் நினைத்துப் பாடிய 'சீரார் பவளங்கால் முத்தங் கயிராக' என்ற பாடலைப் பாடுவர் 'பொன்னூஞ்சல் ஆடாமோ' என்ற இறுதி வரியை மூன்று தடவை இணைந்துபாடும் போது பொற்சுண்ணம் இடித்த சிறுமியர் வலம் இடமாக மூன்று முறை பொன்னூஞல் பலகையை மெதுவாக ஆட்டுவர். குருக்கள் சிவன்உமைக்கு புஸ்பாஞ்சலி செலுத்தி தீபாராதனை காட்டுவார். ஐயர் சங்கூதுவார். அடியார்கள் அரோகரா சத்தம் இடுவார். பின்னர் அமைதி நிலவும் அப்போது 'ஓங்காரத் துரவம் என எமையவளின் பாலகனாய்' என்று தொடங்குகின்ற பிள்ளையாருக்கு உரிய பொன்னூஞ்சல் பாடல்காப்படும். அப்பாடலின் இறுதி வரியான பொன்னூஞ்சல் ஆடாமோ என்பது மூன்று முறை பாடப்படும் போது குருக்கள் பிள்ளையாருக்கு புஸ்பாஞ்சலி செலுத்தி தீபாராதனை காட்டுவார் ஏனைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். அரோகரா சத்தம் முடிவுற்றுது அமைதி நிலவும் அப்போது 'சரவணனே சண்முகனே சக்தி வடிவேல் முருகா' என்று தொடங்கும் முருகப் பெருமானுக்குரிய பொன்னூஞ்சல் பாடப்பாடப்படும்.

 

பொன்னூஞ்சல் ஆடதமோ என்பது மூன்று முறை பாடப்படும் போது முருகப் பெருமானுக்கு புஸ்பாஞ்சலியும் தீபாராகனைகளும் ஏனைய நிகழ்வுகளும் நடைபெறும். சுவாமி மாணிக்கவாசகர் சிவபெருமானுக்கு ஒன்பது பொன்னூஞ்சல் பாடல்களையே பாட உள்ளார். அதனை அடியொற்றி பிள்ளையாருக்கும் முருகனுக்கும் தனித்தனியே ஒன்பது பொன்னூஞ்சற் பாடல்களே பாடப்பட்டுள்ளன. சிவபொருமான் பிள்ளையார் முருகன் என்று பாடி முடிந்ததும் மீண்டும் சிவபெருமான் பிள்ளையார் முருகன் என்று பாடல்கள் தொடரும் இவ்வாறான தொரு திருப் பொன்னூஞ்நலை ஏனைய இடங்களிலே காண்பது அருமை. ஆனால் களுதாவளைப் பிள்ளையாரின் திருப் பொன்னூஞ்சளை காணவரும் அடியவரின் தொகை வருடம் தோறும் பொருகி வருகின்றது. எல்லாம் பிள்ளையாரின் திருவருளே பொன்னூஞ்சல் பாடல்கள் முடிமுற்றதும் பஞ்ச புராணம் ஓதப்படும். அதன் பின்னர் திருப் பொன்னூஞ்சற் பூசை முடிவுறும். உரியவர்களுக்கு உரிய முறைப்படி காளாஞ்சி வழங்கப்படும்.

பின்னர் பொன்னூஞ்சற் பலகையில் இருந்த சுவாமிகளை பிள்ளைத் தண்டுடன் எடுத்து குனிந்து நின்று ஆடி அசைத்து வசந்த மண்டபத்தினுள் எடுத்துச் செல்வர் இந்த நேரத்திலும் அடியார்களை கட்டுப்படுத்துவது மிகச் சிரமமான காரியம் சுவாமியை திருவாசியையோ அல்லது ஒரு பாகத்தையோ தொட்டு விட வேண்டும் அதில் இருக்கும் பூவையாவது பெற்று விடவேண்டும். என்பதில் முண்டியடித்துக் கொண்டு இருப்பர். முறையே பிள்ளையார் சிவன் உமை வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகப்பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்துள் சென்றடைவர். பஞ்சாராத்தி காட்டியதும் திரை மூடப்படும். அதன் பின் வசந்த மண்டபத்தில் இருந்து மூலஸ்த்தான கதவும் படி வரை நிலப் பாவாடை விரிக்கப்படும் மூலஸ்த்தானத்துள் இருந்து எடுத்து வரப்பட்ட சுவாமியை குருக்கள் எடுத்து வந்தது போல மூடிய மொக்காட்டினுள் கருவறைக்கு எடுத்துச் செல்வார். இத்துடன் தீர்த்தோற்சவ நிகழ்ச்சிகள் முடியுற்றதான ஒரு நிலை ஏற்படும் வழைமயான பூசை நடைபெற்று அடியவர்கள் தரிசனம் செய்வர்.

அன்னதானம் -

தானங்கள் பலவற்றுள்ளும் அன்னதானம் பெருமை மிக்கது. ஏனைய தானங்;கள் வழங்கும் போது பெற்றுக்கொள்வனுடைய மனம் பூரண திருப்தி அடைவதில்லை. அன்னதானம் மட்டும் வயிறார உணவு உண்டதும் போதும் போதும் பூரண திருப்தி என்று சொல்வார்கள். இதனை மாகேசுர பூசை என்று பெயரிட்டு பெருமைப் படுத்தி உள்ளனர். சிவனடியார்களை சிவபெருமானாக நினைத்து அமுதூட்டுவதே அன்னதானம் ஆகும். திருவிழாக் காலங்களில் கோவிலுக்கு வரும் அடியார்களின் பசிக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகும். தீர்த்தோற்சவ தினத்தன்று இங்கு வரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நடை முறை அண்மைக்காலமாக நடைமுறையில் இருக்கின்றது.பிள்ளையார் ஆலய நிருவாகம் களுதாவளையில் உள்ள மன்றங்கள், கழகங்கங்கள், சங்கங்கள்,பொதுமக்கள் என்போரின் ஆதiவோடு மாபெரும் அன்னதானம் நடைபெறுகின்றது. உள்ளுர் வெளியூர் என்ற வேறுபாடு இன்றி ஆண்களும் பென்களுமாக பலர் ஒன்று கூடி இறுதி நாள் திருவிழா அன்றிரவு சமையல் வேளையில் மும்முரமாக ஈடுபடுவர் சுமார் ஐம்பது அறுபது மூடை அரிசி சாதம் சமைக்கப்படுகிறது. அதற்கு வேண்டிய காய்கறிகளும் சமைக்கப்படுகிறன. பொரியல் குழம்பு சொதி ரசம் பால் தயிர் பழம் என்பவையெல்லாம் பரிமாறப்படும். தீர்த்தம் முடிவுற்றதும் ஆயிரக் கணக்கான அடியார்கள் அன்னதானத்தில் கலந்து கொள்வர்.

அத்தியாவசி தேவைகள் :-

திருவிழாக் காலங்களில் குடிநீர் வசதி, மலசல கூட வசதி, சுகாதார வசதி, வைத்திய வசதி, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு வசதி என்பவைகள் எல்லாம் முன் ஏற்பாட்டுடன் சிறப்பாக நடைபெறும். தீர்த்தக் கேணியில் உள்ள ஏற்று நீர்ப் பாசன பம்பி மூலம் மட்டகளப்பு வாவி நீர் தீர்த்தக் கேணியுள் நிரப்பப்படும் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

 

சங்கற்பம் :-

சங்கற்பம் என்பதற்கு எண்ணம் நியமம் மனப்பொருத்தனை, மனோ நிச்சயம், விருப்பம் என்று கருத்துக் கூறப்பட்டு இருக்கின்றது. திடசங்கற்பம் என்பதற்கு உறுதியாக எண்ணுதல் நினைத்தல் என்று பொருள் கொள்வர். ஒர காரியத்தை செய்யத் தொடங்கும் போது அது பற்றி நன்றாக எண்ண வேண்டும். அதற்கு வேண்டிய நியமங்களைக் கை;கொள்ள வேண்டும் அச்செயலை திருப்திகரமாகச் செய்வதற்கு மனப்பொருத்தனை ஏற்படுத்துதல் வேண்டும் இதனால் அச்செயலிலே இயல்பாகவே ஒரு விருப்பம் ஏற்படும் இதனையே சங்கற்பம் என்ற சொல்லினுள் பொதித்து வைத்துள்ளனர். பிள்ளையார் ஆலயத்திலே பல சந்தர்ப்பங்களில் பலரும் சங்கற்பம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. திருவிழா தீர்த்தம் பூசை, விரதம், அபிடேகம் என்பவற்றின் போது வண்ணக்குமார் கடுக்கண்டவர் நிருவாகிகள் விரதாதிகள் உபயகாரர்கள் என்று ஆண்களும் பெண்களும் சங்கற்பம் இருக்கின்றனர். இதன் உட்பொருளையும் அதற்குரிய விதி முறைகளையும் அறிந்து அனுட்டிப்பதால் அதனால் ஏற்படும் பயன் அதிகரிக்கும். கோவில்களில் நடைபெறும் செயல்கள் விக்கினம் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக விக்கினேசுவரம் பெருமானை முதலிலே மனதில் நினைத்துக் கொள்வதே சங்கற்கமாகும். தன்னை வணங்கி செயல்களை ஆரம்பிப்போருக்கு வருகின்ற விக்கினங்களை நீக்குபவர் விக்கினேசுவரர். தன்னை நினையாமலும் வணங்காமலும் தொடங்கப்படும் காரியங்களுக்கு தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி அவர்களின் தறவுகளை உணரச் செய்து தன்னை வணங்கிய பின் காரியங்களை றிறைவேற்றிக் கொடுப்படுவர் விநாயகர். எக்காரியத்தை தொடங்கும் போதும் விக்கினேசுவர பூசையுடன் ஆரம்பிப்பதே இற்துக்களின் மரபு.

பிள்ளையார் ஆலயத்தில் சங்கற்பம் நடைபெறும் போது குருக்கள் குடுபங்கள் நிறுத்தி மங்கல விளக்கேற்றி வைத்து சாணத்திலோ மஞ்சளிலோ மாவிலோ பிள்ளையார் பிடித்து வைத்து அறுகம் புல்குற்றி உரிய கிரியைகயை ஆரம்பிப்பார். கோலம் போடப்பட்ட இடத்தினுள் குடுபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். அக்கினி பாரியம் நடைபெற வேண்டிய ஓம குண்டத்திற்கும் கோலம் போட்டு வைப்பார். ஆசார அனுட்டானங்களை முடித்துக் கொண்ட குருக்கள் ஆமை வடிவில் மைந்த கூர்மாசனத்தின் மீது வெள்ளை விரித்து அமர்ந்திருப்பார். நான்கு கால்களையும் தலையினையும் தனது ஓட்டின் உள்ளே ஆமையானது இழுத்து அடக்கிக் கொள்வது போல குரவானவரும் தனது ஐம் பொறிகளையும் ஐம் புலங்களையுமு; அடக்கி, நேராக நிமிந்து நின்று தம்மை நிவமாக பாவனை செய்து கொள்வார். கலசம் மணி தீபம் என்பவற்றுக்கெல்லாம் பூசை செய்து பின்னர் விநாயகர் பூசை. புண்ணியா வாகனம் என்பவற்றையும் நடாத்தி ஆத்மசுத்தி திரவிய சுத்தி மண்டப சுத்தி என்பவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வார். சங்கற்பம் இருக்க வேண்டியவர்களை அழைத்து வட திசையை பார்த்த படி பத்மாசனம் இட்டு சம்மானம் கோலி இருக்கும் படி கூறுவர். பின்னர் தற்கைப் புல்லினால் ஆன பௌத்திரம் ஒவ்வொரு வருக்கும் கொடுக்கப்படும். ஆண்கள் வலதுகை மோதிர விரலிலும் பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிய வேண்டும். தற்பையின் கூர்ப் பகுதி புறங்கைப் பக்கம் இருக்க வேண்டும் பின்னர் கட்டைப் புல் எனப்படும். தற்கைப்புல் குச்சிகள் சங்கற்பம் இருப்போருக்கு கொடுக்கப்படும். ஆண்கள் அக்கட்டைப் புல் ஒன்றை வலது காதிலே செருகிக் கொள்ள வேண்டும். மற்றொன்னை வலது கால் பாதத்தின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் இடது காதில் அல்லது தலைமுடியில் செருகி மற்றொன்றை இடது கால் பாதத்துள் வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் மஞ்சள், கட்டைப்புல் என்பவற்றோடு கலந்த அர்ச்சதை எனப்படும். அரிசி ஒவ்வொருவர்க்கும் வழங்கப்படும் (அதனை பெற்றுக் கொண்ட ஆண்கள் இடது உள்ளங் கையுள் அவற்றை எடுத்து வலது உள்ளங்கையினால் அவற்றை மூடி வலக் கை மேல் இருக்கும் வண்ணம் வலது தொடையில் அல்லது முழங்காலில் வைத்து கொள்ளவேண்டும். கையில் அணிந்த பௌத்திரத்தின் நுனி மேல் நிமிந்திருக்க வேண்டும்)

இதனைப் பெற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் தாம் தொடங்கப் போகின்ற காரியம் இனிதே நிறைவேற வேண்டும் என்று எல்லாம் வல்ல விக்கினேஸ்வர பெருமானை வேண்டி மூன்று முறை சிரசிலே குட்டிக் கொள்ள வேண்டும். அர்ச்சதை பெற்றுக் கொண்ட ஆண்கள் அதனை இடது உள்ளங் கையுள் அவற்றை எடுத்து வலது உள்ளங் கையால் மூடி வலக்கை மேல் இருக்கும் வண்ணம் வலது தொடையில் அல்லது முழந்தாலில் வைத்துக் கொள்ள வேண்டும். கையில் அணிந்த பௌத்திரத்தின் நுனி மேலே நிமிந்திருக்க வேண்டும். பெண்கள் அரிசி, மலர்கள், மஞ்சள், தற்ப்பை என்பனை சேர்ந்த அர்ச்சதையை வலது உள்ளங் கையுள் வைத்து இடது உள்ளங் கையால் மூடி இடக் கை மேலிருக்கும் வண்ணம் இடது தொடையிலோ அல்லது முழங்காலிலோ வைத்து கொள்ள வேண்டும். பௌத்திரம் எனப்படும் தற்ப்பையின் நுனி மேலே நிமிர்ந்திருக்க வேண்டும். குருக்கள் அன்றைய வருடம், மாதம், நாள், திதி முதலானவற்றை எல்லாம் சொல்லி எதற்காக சங்கற்பம் வைக்கப்படுகின்றதோ அதனையும் சொல்லி சங்கற்பம் இருப்பவரின் பெயர், நட்சத்திரத்தையும் சொல்லி விநாயகரை வணங்கும்படி சொல்வார். அது முடிவுற்றதும் ஒரு தாம்பளத்திலே சங்கற்பம் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அர்ச்சதை எனப்படும் அரிசி திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.

அதன் பின்னர் சங்கற்பம் இருந்தோர் தமது விரலில் போடப்பட்டு இருந்த தற்பையால் ஆன பௌத்திரத்தை கழற்றி விடவேண்டும். புண்ணியா வாகனம் செய்த பாலோதனம் எனப்படும் பால், சங்கற்பம் இருந்தோருக்கு சிறிதளவு வழங்கப்படும். இடது கையின் மேல் வலது கை வைத்திருக்க உள்ளங் கையில் ஒரு உழுந்து அல்லது கடலை அமிழ்ந்திருக்கின்ற அளவு பாலோதனம் வழங்கப்படும். அதனை பயபக்தியோடு அருந்த வேண்டும். அதன் பின்னர் தீர்த்த கலசத்திலிருந்து சிறிதளவு நீர் பாலோதனம் பெற்ற கையில் ஊற்றப்படும். அந்நீரினால் கையை துடைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் பௌத்திரம் எனப்படும் தற்ப்பையை முன்போல் விரலில் அணிந்து கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் ஓம குண்டத்தில் அக்கினி காரியம் நடைபெறும் ஓம குண்டத்திலிருந்து கும்பங்களுடன் நாடி சந்தானம் இணைக்கப்படும். ஓமகுண்டத்தில் சொரியப்படுகின்ற ஆகுதிகளும் மந்திரங்களும் கும்பத்தை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நாடிசந்தானம் என்ற நூல் இணைக்கப்பட்டுள்ளது. அக்கினி காரியம் நிறைவுறும்போது குருக்களும் சங்கற்பம் இருந்தோரும் எழுந்து நிற்பர். குருக்கள் சுருவம் எனப்படும் நெய் வாற்றும் பாத்திரத்தினுள் நெய்யினை ஊற்றி யாழித்தலை போன்று அமைந்திருக்கும் அதன் வாய்த் துவராத்தை சிறிய பூ ஒன்றினால் மறைத்து சுருக்கு எனப்படும் அகப்பைபோல் நீண்டிருக்கும் துடிப்பினை சுருவத்தின் மீது வைத்து இடது கையினால் சுருவத்தை தங்கிப்பிடித்து வலது கை மேலே வைத்து சுருக்கையும் சுருவத்தையும் இணைத்து பிடித்துக் கொள்வார். பூரண ஆகுதி கொடுப்பதற்குரிய ஓமத்திரவியங்கள் தேங்காய், பட்டு, தட்சணை என்பவற்றுடன் கூடிய தாம்பாளத்தை சங்கற்பக்காரரிடம் கொடுப்பர்.

பூரண ஆகுதிக்குரிய மந்திரத்தை ஓதி ஓம குண்டத்தில் குருக்கள் சுருவம் சுருக்கில் இருந்து நெய்யை ஊற்றும் போது தாம்பாளத்தில் இருந்த பொருட்களை ஓமகுண்ட அக்கினியில் போட்டு விடவேண்டும். பின்னர் ஓமகுண்டத்துடன் தொடுக்கப்பட்டிருந்த நாடிசந்தான நூல் தூண்டிக்கப்படும். தற்ப்பைப் புல்லில் வெட்டி எடுக்கப்பட்ட நுனி நீங்கிய கட்டைப் புற்களை ஓமத்தீயில் எரித்து நெய் ஊற்றப்பட்ட வெற்றிலையில் குழைத்து அக்கரியை கறுப்புப் பொட்டாக தயாரிப்பார். கும்பங்களுக்கு தற்ப்பை புல்லால் இப் பொட்டு வைக்கப்படும். குருக்களும் சங்கற்பம் இருந்தோரும் கும்பம் தூக்குவோரும் இதனை நெற்றியில் பொட்டு இட்டு கொள்வர். காவலுகக்கு உரிய பொட்டாக இது கருதப்படுகிறது.

 

மாம்பழத் திருவிழா -:

களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவத்தில் இறுதிநாள் திருவிழா அன்று இத்திருவிழாவும் நடைபெறுகின்றது. வெளி வீதி (உள) சுற்றிக் கொண்டு மூன்று சுவாமிகளும் மூலஸ்தானத்துக்கு நேரே வந்து சேரும்போது இத்திருவிழா ஆரம்பமாகிறது. திரு வேட்டைத்திருவிழா மாம்பழத் திருவிழா என்பவை திருவிழா எண்ணிக்கையுடன் சேர்த்துக் கணக்கெடுக்கப்படுவதில்லை. இங்கு நடைபெறும் மாம்பழத் திருவிழா சம்பிரதாய பூர்வமாகவும் பக்தி பூர்வமாகவும் சமய கிரியைகளோடு இணைந்ததாகவும் நடைபெறுகின்றது. இது ஆலய நிருவாகம் குருக்கள் அடியார்கள் இதனை நடாத்தும் குழுவினர் என்பவர்களின் முழுமையான ஒருங்கிணைப்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னேற்பாட்டுடனும் நடைபெறுகின்றது. இது நாடக வடிவில் நடைபெறுகின்றது. சிவன், உமை, பிள்ளையார், முருகப்பெருமான் நாரதர் ஆகிய கதாபாத்திரங்கள் பங்கு கொள்கின்றனர்.

நாரதருக்காக எவரும் வேடம் தரிப்பதில்லை. அவர் உருவம் அற்ற அருபியாக இதில் பங்கு கொள்கின்றார். பிள்ளையார், சிவன், உமை, முருகப்பெருமானுக்கு உரிய பாத்திரங்களை எழுந்தருளி மூர்த்திகளோ ஏற்றுக் கொள்கின்றனர். இதனால் இந்நிகழ்ச்சியின் போது அடியார்களின் கண்ணும் கருத்தும் எழுந்தருளி மூர்த்திகளிலேயே லயத்திருக்கும். ஆலயத்திற்கு வரும் மாம்பழங்களிலே மாம்பழத் திருவிழாவுக்கு பொருத்தமான மாம்பழங்கள் தெரிந்தெடுக்கப்படும். அவை மூலஸ்தானத்தினுள் வைக்கப்பட்டு இருக்கும். மாம்பழத் திருவிழாவை பார்க்கவும் கேட்கவும் அடியார்கள் ஆவலோடு அமர்ந்திருப்பார். திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இது பற்றிய தத்துவ கருத்துக்கள் யாவும் விளக்கிக் கூறப்படும். இதனால் அடியவர்களின் மனங்களெல்லாம் பக்குவப்படுத்தப்பட்டு இறை சிந்தனையில் ஊறித்திளைத்திருக்கும். நாரதர் கொண்டு வந்த ஞானப்பழமான மாங்கனியை வைத்து ஒரு நாடகம் நடை பெறுகின்றது. இந்த நாடகத்தில் நாரதர் பிள்ளையார் சிவன் உமை முருகன் என்போர் நடிக்கின்றனர். நாடக கதாபாத்திரங்களான இவர்களுக்கு கதை வசனங்களும் கதையின் போக்கும் நிகழ்வுகளும் முடிவும் ஏற்கனவே நன்றாகத் தெரியும். ஆனால் தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று இந்த நாடகத்தில் அவர்கள் நடிக்கின்றனர். கூத்து நாடகம் திரைப்படம் இலக்கியங்கள் என்பவற்றின் மூலம் உலக மாந்தருக்கு பல உண்மைகள் புலப்படுத்தப்படுகின்றன. அந்த வகையிலேயே மாம்பழத் திருவிழாவும் அமைகின்றது. பாடல்களும் வசனமும் கலந்ததாக இது இயற்றப்பட்டுள்ளது. இத்திருவிழாவினை நடாத்தும் குழுவினர் ஆலய மூன்றலில் நிற்கும் மூர்த்திகளை வணங்கி தமது நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற ஆண்டவனின் விபூதிப் பிரசாதத்தை பிரதம குருக்களிடம் இருந்து பெற்றுக்கொள்வர். கருவறையினுள் வைக்கப்பட்டிருந்த ஞானப் பழமான மாம்பழம் பட்டுச்சீலையினால் போர்த்தி எடுத்து வரப்பட்டு பிரதம குருவிடம் ஒப்படைக்கப்படும் பின்னர் அது சிவபெருமானிடம் கொடுக்கப்படும். இந்த திருவிழா நடைபெறுகின்ற வேளையிலே ஆலயத்தின் உள்வீதி வெளிவீதி கடைவீதி ஆகிய அனைத்து இடங்களிலும் அமைதி பேணப்படும். நிகழ்ச்சிக்குரிய ஒலிபெருக்கி தவிர ஏனைய ஒலிபெருக்கிகள் வானொலிப் பெட்டிகள் தொலைக் காட்சிப் பெட்டிகள், ஊதுகுழல்கள் என்பன அனைத்தும் நிறுத்தப்பட்டு நிசப்தம் நிலவும் இந்த வேண்டுகோளை பிள்ளையார் ஆலயத்திற்கு வரும் அனைவரும் மாம்பழத்திருவிழா நிறைவுறும் வரையில் மனப் பூர்வாக ஏற்றுக் கொள்வது பிள்ளையாரின் திருவருட் செயலே ஆகும். இத்திருவிழாவின் உட்பொருளாக பின்வரும் விடயங்கள் அடங்கி இருப்பதை திருவிழா ஆரம்பத்திலேயே விளங்க வைப்பது பொருத்தமாக அமைகின்றது.

பிள்ளைகளுக்கு அன்னை பிதாவே உலகம் என்ற அரிய உண்மையினை எளிதாக உணர வைத்தல்.

 

 

சிறு பிள்ளைகளுக்கு பிறர் கொண்டுவரும் சாப்பாட்டு பொருள்களின் மீது மிகுந்த ஆசை ஏற்படுவதும் அதனை தாம் மட்டுமே தனித்து உண்ண விரும்புவதும் அதனால் பிள்ளைகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுத்தும் இயல்பு.

 

நாரதரைப் போன்ற பலர் ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களுக்கு இடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவது இயல்பு.

 

 

ஒரு பொருளை ஒரு குடும்பத்திற்கு ஓப்படைக்கும் போது அக்குடும்பத்தின் தலைவனிடம் ஒப்படைப்பதுதான் பொருத்தம்.

 

குடும்பத்தலைவன் தனக்கு கிடைக்கும் பொருகட்களை எல்லாம் இல்லத்தரசியான மனைவியிடம் ஒப்படைத்து அவரது ஆலோசனையையும் கேட்டுப் பங்கிடுவதே வாழ்க்கைத் தத்துவம்.

 

 

தமது குழைந்தைகளிடையே வித்தியாசம் காட்டாது சமமாக பங்கிட்டு அளிப்பதே தாய் அன்பு.

 

இறைவனுக்கு ஒரு பொருளை அற்பணம் செய்து விட்டால் அதன் பின்பு கொடுத்தவனுக்கு அதிலே உரிமை இல்லை.

 

 

ஞானத்தை ஆளுக்கு பாதியாக பங்கிடுவதிலே அர்த்தம் இல்லை. ஞானம் முழுமையாகவே இருக்க வேண்டும்.

 

குடும்பத்திலே சண்டை தோன்றுவதற்கு குடும்பத்தின் பொதுச்சொத்துகளும் காரணமாகின்றன.

 

 

திறமையானவர்களை தெரிவு செய்வற்கு போட்டி நடாத்துவதே சிறந்த வழி.

 

போட்டியிலே வெற்றி பெற்றவருக்கு பரிசளிப்பது முறையாகும்.

 

 

போட்டியிலே தோல்வியுற்றவர் பொறுமையாக இருக்க வேண்டும்.

 

போட்டி நிபந்தனைகள் போட்டியாளர்களுக்கு சமமாக பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

 

 

தந்தை தனது பிள்ளைகளின் அறிவு, ஆற்றல்,திறமை என்பனவற்றை தெரிந்து அதற்கேற்ப அவர்களுக்கு பரிசளிக்க விரும்புவதே உலக இயல்பு.

 

போட்டியிலே வெற்றி பெறுவதற்கு திறமை மட்டும் அன்றி பொறுமையும் மதிநுட்பமும் அவசியம்.

 

 

உணர்ச்சி வசப்படுவதும் இறுமாப்புக் கொள்வதும் தோல்விக்கு வழிவகுக்கும். அறிவு பூர்வமாக ஆழ்ந்து சிந்திப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

 

அவசரப்படும் போது அறிவு மயங்கிவிடும்.

 

 

அண்ணன் தம்பிகளுக்கு இடையே வரும் சண்டை மிக எளிதாக சமரசம் ஆகிவிடும்.

 

பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழி உண்மையானது.

 

 

விரதம் நோற்பதினால் எண்ணங்கள் எளிதாக நிறைவுறும்.

 

விநாயகரை வழிபடுவதால் வெற்றி நிச்சயம் உண்டு.

 

 

இவ்வாறான எத்தனையோ தத்துவங்கள் இந்த மாம்பழத் திருவிழாவின் உள்ளே மறைந்திருந்து சுவையூட்டுகின்றன. நாரதர் ஞானப்பழத்தை சிவபெருமானிடம் கொடுக்க அவர் உமா தேவியிடம் கொடுக்கிறார். பிள்ளையாருக்கும் முருகனுக்கும் சரிபாதியாக பங்கீட்டு கொடுப்பதற்கு உமாதேவி விரும்புகிறார். ஞானப் பழத்தை பங்கிடாது முழுமையாக உண்பதே முறை என்கின்றார் நாரதர். மூத்த பிள்ளைக்கே முன்னுரிமை என்று பிள்ளையார் கூற இளைய பிள்ளைக்கும் சம உரிமை உண்டென்று முருகன் வாதாடுகிறார். அரிய பொருள் பெறுவதற்கு தகைமை உடையவரை தெரிவு செய்வதற்கு உலகம் சுற்றும் போட்டி நடை பெறுகின்றது. முருகன் மயிலிலே பறக்க பிள்ளையார் தாய் தந்தையரை எலியில் ஏறி சுற்றுகின்றார். பிள்ளையார் மாங்கனியைப் பெற முருகன் கோபித்துக்கு கொண்டு போகிறான். உமாதேவி முருகன் திரும்பி வரவேண்டும் என்று விரதம் அனுஷ்ட்டிக்கின்றாள்;. கோபம் ஆறியதும் உண்மையை உணர்ந்த முருகன் திரும்பி வருகின்றான். பிள்ளையார் முருகனை கட்டி அனைத்துக் கொள்கின்றார். பிரிந்தவர்கள் ஒன்று கூடி விட்ட மகிழ்ச்சியிலே பாடுகின்றனர்.

இனிமையான பாடல்களும் அருமையான வசனங்களுமாக இந்த நாடகம் நடந்து முடிகிறது. முருகன் உலகம் சுற்றுவதற்கு மயிலிலே வெளி வீதியைச் சுற்றி பறந்து செல்வதும் பிள்ளையார் எலிவாகனத்துடன் தாய் தந்தையரை சுற்றுவதும் மாம்பழத் திருவிழாவின் அதி உச்சக்கட்டமாக இருக்கும். அடியவர் எல்லோரும் தெய்வீகம் ஆனதொரு நாடகத்தை நேரிலே பார்த்து இன்புறுவர் இதன் பின் சுவாமிகள் வழமையான திருவிழாவைப்போல் ஆலயத்தின் உள்ளே சென்று வசந்தமண்டபத்துள் சென்று கொலு வீற்றிருப்பர். பூசை முடிவுற்றதும் மாம்பழத்திருவிழாவுக்கு பயன்படுத்தப்பட்ட மாம்பழங்கள் உரியவர்களிடம் காளாஞ்சி மூலம் வழங்கப்படும்.

 

 

ஆலய அமைப்பு பற்றி அறிவதற்கு

 

 

புதியவை இங்கே...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

 

 

 
 
  Domain Name + 1GB Linux India Web Hosting in Rs.349